• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அமெரிக்காவுக்கு மறுப்பு தெரிவித்தோம், கிரிக்கெட் அழிந்தது- பாகிஸ்தான் அமைச்சர் பகீர் தகவல்

அமெரிக்காவுக்கு மறுப்பு தெரிவித்தோம், கிரிக்கெட் அழிந்தது- பாகிஸ்தான் அமைச்சர் பகீர் தகவல்

இம்ரான் கான்

இம்ரான் கான்

பாகிஸ்தான் தொடரை நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் புறக்கணித்து பாதுகாப்பு காரணங்களினால் ரத்து செய்ததற்குக் காரணம் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்ததே என்கிறார் பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபவாத் சவுத்ரி.

  • Share this:
    imபாகிஸ்தான் மண்ணில் அமெரிக்க ராணுவ முகாம்களை அமைக்க அமெரிக்காவின் முயற்சியை பாகிஸ்தான் தடுத்து மறுத்தது. அதற்கான விலையை பாகிஸ்தான் கிரிக்கெட் கொடுத்து வருகிறது என்கிறார் அமைச்சர் பவாத் சவுத்ரி. 18 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரை ஆடவிருந்தது. இதனையடுத்து அடுத்த மாதம் நடைபெறவிருந்த இருதரப்பு தொடரையும் இங்கிலாந்து ரத்து செய்ததால் பாகிஸ்தானுக்கு ஏகப்பட்ட நஷ்டம்.

    இந்நிலையில் இம்ரான் கான் நேற்று அமைச்சரவையைக் கூட்டினார் கூட்டம் முடிந்த பிறகு ஃபவாத் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியது, “அமெரிக்கா தனது ராணுவ முகாம்களை இங்கு அமைக்க கேட்டிருந்தது, முடியவே முடியாது என்றோம் அதற்கான விலையை பாகிஸ்தான் கிரிக்கெட் கொடுத்தது.” என்றார், அதாவது ஆப்கானிலிருந்து படைகளை வாபஸ் பெற்ற பிறகு அங்கு ஒரு கண் வைத்துக் கொள்வதற்கு பாகிஸ்தான் சிறந்த இடம் எனவே அமெரிக்க ராணுவ முகாம் இங்கு இருப்பது நல்லது என்று பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்கா கேட்டிருந்தது.

    “ஒரு நாடு தலைநிமிர்ந்து ஆதிக்க நாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் போது அதற்கான விலையைக் கொடுக்க வேண்டி வரும். பாகிஸ்தான் எந்த சவாலையும் சமாளிக்க தயாராக உள்ளது” என்கிறார் சவுத்ரி. பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு இந்தத் தொடர்கள் ரத்து மூலம் 200 மில்லியன் ரூபாய்கள் முதல் 250 மில்லியன் ரூபாய்கள் வரை நஷ்டம் என்று சவுத்ரி ஏற்கெனவே ட்வீட் செய்திருந்தார்.

    இரு நாடுகளும் இங்கு வந்து கிரிக்கெட் ஆட மறுப்பது பாகிஸ்தானுக்கு எதிரான உலக நாடுகளின் சதித்திட்டம் என்று வர்ணித்த சவுத்ரி, கலப்புப் போர், போலிச் செய்திகள் ஆகியவை போல் போலி மின்னஞ்சல்கள், போலி அச்சுறுத்தல்களின் காலமாக இது உள்ளது என்று கூறியுள்ளார் சவுத்ரி.

    இதையும் படிங்க: பாடம் கற்றுக் கொண்டோம், இனி நாங்களும் வேலையைக் காட்டுவோம் - ரமீஸ் ராஜா காட்டம்

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: