பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றம் முன்னேற்றம்... - ரமீஸ் ராஜாவின் அதிரடி முடிவில் பயிற்சியாளர்களாக ஹெய்டன், பிலாண்டர்

பாக்.கிரிக்கெட் வாரிய சேர்மன் ரமீஸ் ராஜா.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரமீஸ் ராஜா பொறுப்பேற்றதன் முதல் அதிரடி முடிவாக உலகக்கோப்பை டி20 தொடருக்கு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக மேத்யூ ஹெய்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் வெர்னன் பிலாண்டரை நியமித்துள்ளார்.

 • Share this:
  மாற்றம் முன்னேற்றம் நோக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் செல்வதற்காக இம்ரான் கான், ரமீஸ் ராஜாவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக்கியுள்ளார். வந்தவுடனேயே வீரர்களிடம் அணியில் இடம் பற்றி வீரர்கள் கவலைப்பட வேண்டாம், மற்றபடி நீங்கள் அச்சமற்ற கிரிக்கெட் ஆட்டத்தை ஆடுங்கள் என்று ஊக்கமளித்துள்ளார். மேலும் இந்தப் பாதையில் சென்றால் நாம் அதிக தோல்விகளைத் தான் சந்திப்போம் என்பதும் தெரியும் ஆனால் உலகக் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் இருப்பைக் காட்ட வேண்டுமெனில் அச்சமற்ற கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

  வீரர்களின் மனநிலையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டியுள்ளது என்கிறார் ரமீஸ் ராஜா. இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர் அரசியலால் பாதிக்கப்பட்டுள்ளது, எனவே இதில் இப்போதைக்கு மாற்றம் முன்னேற்றம் இல்லை, முதலில் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் உள்கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்கிறார் ரமீஸ் ராஜா.

  பாகிஸ்தான் கிரிக்கெட் சீரழவிக்கு பொறுப்பாக்க வேண்டுமென்றால் வாரியத்தில் இருக்கும் 90% நிர்வாகிகளை வீட்டுக்குத்தான் அனுப்ப வேண்டும் என்று இம்ரான் கொடுத்த தைரியத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார் ரமீஸ் ராஜா. ஆனால் ரமீஸ் ராஜா முன்மொழியும் மாற்றம் முன்னேற்றம் அவ்வளவு எளிதல்ல அங்கு என்பதுதான் கடந்த கால சீர்த்திருத்த வாதிகளின் அனுபவமாகவும் இருந்துள்ளது.

  காரணம் ரமீஸ் ராஜாவுக்கு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். வக்கார் யூனிஸ், மிஸ்பா உல் ஹக் விலகியது கூட ரமீஸ் ராஜா நியமனம் பிடிக்காமல்தான் என்று தெரிகிறது. பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடரில் டீ.ஆர்.எஸ் ரிவியூ கிடையாது என்பதை தான் விரும்பவில்லை என்றும் அதை மாற்றுவேன் என்றும் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

  ஏற்கெனவே 2003-2004-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயலதிகாரியாக இருந்தவர்தான் ரமீஸ் ராஜா. ஐசிசி செயலதிகாரிகள் மட்டத்தில் பாகிஸ்தானை பிரதிநிதித்துவம் செய்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் இவர் மூலம் விடிமோட்சம் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  ஏனெனில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அடிக்கடி ஆடினால்தான் வெளிநாடுகளில் சென்று இரு அணிகளுமே போட்டிசார் மனநிலையில் ஆடுவார்கள் என்பது உறுதி. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் மன நிலையை கடினமாக்கும் என்பதோடு சவால்களைச் சந்திக்கும் மன உறுதியும் அதிகமாகும். ஆனால் ரமீஸ் ராஜா இப்போதைக்கு இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர் இல்லை என்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: