Yuvraj Singh | டியூக்ஸ் பந்து நல்ல ஸ்விங் ஆகும்: ஷுப்மன் கில், ரோகித் சர்மா தேறுவார்களா?- யுவராஜ் சிங் கருத்து

கோப்பையுடன் யுவ்ராஜ் சிங்.

ரோகித் சர்மா இங்கிலாந்து மண்ணில் முதன் முதலாக டெஸ்ட் போட்டிகளில் தொடக்கத்தில் இறங்குகிறார், ஷுப்மன் கில் அனுபவக் குறைவானவர் எனவே டியூக்ஸ் பந்தில் இவர்கள் சோபிப்பார்களா என்று யுவராஜ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    அதுவும் இங்கிலாந்தில் வீசப்படும் டியூக்ஸ் பந்துகள் அதிகம் ஸ்விங் ஆகும் என்பதால் இருவரும் அந்தச் சூழ்நிலைமைகளுக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொண்டு தொடக்க்கத்தில் விக்கெட்டுகளைக் கொடுக்காமல் ஆடி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிறார் யுவராஜ் சிங்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்ப்டனில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதன் பிறகு இடைவெளி விட்டு இந்தியா-இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகின்றன. இது ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் டாக்கில் பேசிய யுவராஜ் சிங், “ரோகித் சர்மா இப்போது டெஸ்ட் போட்டிகளில் அனுபவ வீரராக உள்ளார். 7 சதங்கள் எடுத்திருக்கிறார், இதில் 4 சதங்களை தொடக்க வீரராக எடுத்துள்ளார். ஆனால் ரோகித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் இப்போதுதான் இங்கிலாந்தில் தொடக்கத்தில் இறங்கவிருக்கிறார்கள்.

    Also Read:  WTC Final: மேட்ச் பிராக்டிஸ் இல்லாமல் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற டாப் வீரர்களுக்கே கஷ்டம் தான்: திலிப் வெங்சர்க்கார்

    அவர்களுக்கு சவால் என்னவென்பது தெரியும், டியூக்ஸ் பந்துகள் அதிகம் ஸ்விங் ஆகின்றன. அவர்கள் விரைவில் அந்த ஸ்விங் நிலைமைகளை கையகப்படுத்த வேண்டும். ஒரு சமயத்தில் ஒரு செஷன் என்று அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    காலை செஷனில் பந்துகள் அதிகம் ஸ்விங் ஆகும். மதியம் ரன்களை கொஞ்சம் விரைவில் எடுக்கலாம், ஆனால் அதற்குள் ஆட்டமிழந்து சிக்கல் ஏற்படுத்தி விடக்கூடாது. பிறகு தேநீர் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஸ்விங் ஆகும்.

    Also Read:  Virat Kohli : விராட் கோலியை திகிலூட்டிய அந்த ஒரு ஓவர்.. காரணம் மகேந்திர சிங் தோனி தான்!

    ஒரு பேட்ஸ்மெனாக இதைப் புரிந்து கொண்டால் இங்கிலாந்தில் சக்சஸ் அடையலாம்.

    ஷுப்மன் கில் ஒரு இளம் வீரர். ஆஸ்திரேலியாவில் தான் நன்றாக ஆடியதை அவர் நினைவில் கொண்டு வர வேண்டும். அவருக்கு தன்னம்பிக்கை இருந்தால் நிச்சயம் வெற்றியடையலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இப்படிப்பட்ட டெஸ்ட் இறுதிப் போட்டி 3 ஆட்டங்கள் நடைபெற வேண்டுமென்ற ரவிசாஸ்திரியின் கோரிக்கையை ஏற்கிறேன். ஒரு போட்டியில் தோற்றால் அவ்வளவுதான் என்று இருக்கக் கூடாது. ஒன்றில் தோற்றாலும் இன்னொன்றில் வெல்ல முடியும் என்றவாறு தொடர் அமைய வேண்டும்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே அங்கு டெஸ்ட் போட்டியில் ஆடுகின்றனர்.

    இவ்வாறு கூறினார் யுவராஜ் சிங்.
    Published by:Muthukumar
    First published: