மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு?

ஐ.பி.எல், உலகக் கோப்பை தொடர் என விளையாடி வருவதால் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு

Web Desk | news18
Updated: July 20, 2019, 6:41 PM IST
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு?
இந்திய அணி
Web Desk | news18
Updated: July 20, 2019, 6:41 PM IST
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பி.சி.சி.ஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐ.பி.எல், உலகக் கோப்பைத் தொடர் என இந்திய அணி வீரர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்கள். டெஸ்ட் சாம்பியன் தொடருக்கான 2 டெஸ்ட் போட்டிகள் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி விளையாட உள்ளது.

டெஸ்ட் சாம்பியன் தொடரின் ஒவ்வொரு வெற்றியும் முக்கியத்துவமானது. வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை வென்றால் அதிக புள்ளிகள் கிடைக்கும் என்பதால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அதிக கவனம் செலுத்தி வருகிறது.


இதனையடுத்து தொடர்ச்சியாக விளையாடி வரும் இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்க வாய்ப்புள்ளது. கேப்டன் விராட் கோலிக்கும், பும்ராவுக்கும் மேற்கிந்திய தீவுகள்அணிகளுக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிகளில் ஏற்கனவே ஓய்வளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஷமி, புவனேஸ்வர்குமார், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கும் ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள், டெஸ்ட் போட்டிகளில்  அணிக்கு திரும்புவார்கள்.

மேற்கிந்திய தீவுகள் செல்லும் இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கேப்டன் விராட் கோலி நேற்று கலந்து கொண்டார். அடுத்த 2 மாதங்களுக்கு ராணுவப் பணியில் ஈடுப்பட உள்ளதால் மகேந்திர சிங் தோனி மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து விலகி உள்ளார்.

Also Watch

Loading...

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...