நாட்டுக்காக விளையாடி மட்டுமே ஜோ ரூட், விராட் கோலியை விட அதிகம் சம்பாதிக்கிறார்: ஆகாஷ் சோப்ரா

ஜோ ரூட்

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இந்திய கேப்டன் விராட் கோலியைக் காட்டிலும் நாட்டுக்காக ஆடியே அதிகமாக சம்பாதிக்கிறார் என்கிறார் ஆகாஷ் சோப்ரா.

  • Share this:
    இலங்கை வீரர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டதையடுத்து வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து போர்க்கொடி உயர்த்திய நிலையில் ஆகாஷ் சோப்ரா இதனை தெரிவித்துள்ளார்.

    யூடியூப் சேனலில் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட ஆகாஷ் சோப்ரா, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றவர்களை விட அதிகம் சம்பாதிக்கின்றனர் என்ற கருத்தை மறுக்கும் ஆகாஷ் சோப்ரா, வாரியத்துடனான ஒப்பந்தத் தொகையை ஒப்பிடுகிறாரே தவிர விளம்பர வருவாய், ஐபிஎல் வருமானம் ஆகியவற்றை ஒதுக்கி விட்டு தன் ஆய்வை ஒருதலைபட்சமாக மேற்கொண்டுள்ளார்.

    Also Read: இந்தியர்களை கேலி செய்து பதிவு- நிறவெறி சர்ச்சையில் சிக்கிய இயான் மோர்கன், ஜாஸ் பட்லர்

    அவர் கூறியதாவது:

    இந்திய வீரர்களுக்குத்தான் அதிக சம்பளம், வருமானம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஆச்சரியம் என்னவெனில் இந்திய வீரர்கள் அதிகம் சம்பளம் பெறும் வீரர்கள் அல்ல. தன் நாட்டுக்காக ஆடுவது மட்டிலுமே ஜோ ரூட், விராட் கோலியை விட அதிகம் வருமானம் ஈட்டுகிறார் என்பது தெரியுமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விராட் கோலி


    இந்தியாவில் கிரேட் ஏ+ ஒப்பந்த வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி. கிரேடு ஏ வீரர்களுக்கு ரூ.5 கோடி. கிரேடு பி-க்கு ரூ.3 கோடி. கிரேடு சி-யிற்கு ரூ. 1 கோடி. டெஸ்ட்டுக்கு ரூ. 15 லட்சம், ஒருநாள் போட்டிகளுக்கு 6 லட்சம், டி20 போட்டிகளுக்கு ரூ. 3 லட்சம் சம்பளம்.
    செஞ்சுரி அடித்தால் ரூ.5 லட்சம், 5 விக்கெட்டுகள் எடுத்தாலும் ரூ.5 லட்சம் கூடுதல் வருமானம். இரட்டைச் சதம் எடுத்தால் ரூ.7 லட்சம். எனவே டெஸ்ட் கிரிக்கெட் ஆடுபவர்களுக்கு அதிக வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது.

    இங்கிலாந்து டெஸ்ட் ஒப்பந்தம் என்பது 6.7 கோடி ரூபாய். அதாவது நம் ஏ+ ஒப்பந்த வீரர்களுக்கு சமம். வெள்ளைப்பந்து சர்வதேச கிரிக்கெட் ஆடுபவர்களுக்கு மட்டும் ரூ.3.1 கோடி. இது பெரிய தொகை இல்லை என்றாலும் மோசமான தொகை என்று கூற முடியாது. இரண்டிலும் ஆடுபவர்களுக்கு ரூ.9.8 கோடி கிடைக்கும். எனவே ஜோ ரூட் ரூ.10 கோடி வருவாய் ஆண்டொன்றுக்கு ஈட்டுகிறார். இதோடு கேப்டனுக்கான ஊக்கத்தொகையாக 25% வழங்கப்படுகிறது.  விராட் கோலியின் ஒப்பந்தத் தொகை ரூ.7 கோடி. ஆனால் ஐபிஎல் பணம் என்பது வேறு.

    ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய, இங்கிலாந்து வீரர்களைக் காட்டிலும் குறைந்த வருமானமே ஈட்டுகின்றனர் என்கிறார் ஆகாஷ் சோப்ரா.

    விளம்பர வருவாய், இந்திய வீரர்கள் வைத்திருக்கும் ஸ்போர்ட்ஸ் நிறுவன ஒப்பந்தங்கள், நடத்தும் நிறுவனங்கள், அதில் பிற வீரர்களையும் சேர்த்து விளம்பர வருவாயை ஒருங்கிணைப்பது போன்ற விவகாரமெல்லாம் என்ன மிஸ்டர் ஆகாஷ் சோப்ரா? இதெல்லாம் எந்த ஊர் கணக்கு மிஸ்டர் ஆகாஷ் சோப்ரா. ஃபோர்ப்ஸ் அதிகம் வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் விராட் கோலி இருக்கிறாரா, ஜோ ரூட் இருக்கிறாரா மிஸ்டர் ஆகாஷ் சோப்ரா?
    Published by:Muthukumar
    First published: