முகப்பு /செய்தி /விளையாட்டு / நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்.. நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்ஸ்டாவில் பதிவிட்ட ரிஷப் பண்ட்

நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்.. நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்ஸ்டாவில் பதிவிட்ட ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

விபத்தில் சிக்கி உடல் நலம் தேறி வரும் ரிஷப் பண்ட் நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி கார் விபத்துக்குள்ளாகி படுகாயத்திற்கு ஆளானார். டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சை பெற்றார்.

பின்னர் சில நாள்களில் உயர் சிகிச்சைக்காக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரிஷப் பண்ட்டிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் ஓய்வு பெற்று உடல் நலம் தேறி வரும் ரிஷப் பண்ட், நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வெளியே அமர்ந்து புதிய காற்றை சுவாசிப்பேன் என நினைக்கவில்லை. நான் ஆசிர்வதிக்கப்படவனாக உணர்கிறேன்" என்று கருத்து தெரிவித்துள்ளார். இதன்மூலம் ரிஷப் பண்ட் உடல்நலம் தேறி வருகிறார் என்பது தெரிகிறது. இந்த பதிவை பார்த்து அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: புதுபோன் தொலைந்த கடுப்பில் விராட் கோலி போட்ட பதிவு.. கூலாக கலாய்த்த சொமேட்டோ..!

சிகிச்சை மூலம் மீண்டு வரும் ரிஷப் பண்ட் மீண்டும் விளையாடுவதற்கு காலம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது 6 மாத காலமாவது தேவைப்படும் என கருதப்படும் நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாட மாட்டார்.அதேபோல, அக்டோபர்-நவம்பரில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிகளிலும் அவர் பங்கேற்பது சந்தேகமே என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Instagram, Rishabh pant