முகப்பு /செய்தி /விளையாட்டு / ILT 20 சீசன் 2 தொடங்கும் தேதி அறிவிப்பு… அணிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என தகவல்

ILT 20 சீசன் 2 தொடங்கும் தேதி அறிவிப்பு… அணிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என தகவல்

சீசன் 1-இல் சாம்பியன் பட்டம் வென்ற கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி.

சீசன் 1-இல் சாம்பியன் பட்டம் வென்ற கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. கிரிக்கெட் உலகின் முக்கிய ஆட்டக்காரர்கள் இந்த தொடரில் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் அடுத்த சீசன் 2024 ஜனவரியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபிஎல், பாகிஸ்தானில் பி.எஸ்.எல்., ஆஸ்திரேலியாவில் பிபிஎல், வெஸ்ட் இண்டீசில் கரீபியன் ப்ரீமியர் லீக் என பல்வேறு நாடுகளில் டி20 கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.எல்.டி20 எனப்படும் சர்வதேச டி20 போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த போட்டிகள் கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கின.

இதில் துபாய் கேபிடல்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ், எம்.ஐ. எமிரேட்ஸ், ஷார்ஜா வாரியர்ஸ், கல்ஃப் ஜெயன்ட்ஸ், டிசர்ட் வைபர்ஸ் என 6 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டிக்கு டிசர்ட் வைபர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணிகள் முன்னேறிய நிலையில், இந்த ஆட்டம் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. கிரிக்கெட் உலகின் முக்கிய ஆட்டக்காரர்கள் இந்த தொடரில் பங்கேற்றனர்.

உலகம் முழுவதும் இருந்து இந்த போட்டிக்கு பார்வையாளர்கள் கிடைத்தனர். இந்த நிலையில், ஐஎல்டி20 தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் தற்போதுள்ள 6 அணிகளுடன் கூடுதல் அணிகளும் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர், துபாயை கிரிக்கெட்டிற்கு ஏற்ற இடமாக மாற்றியுள்ளது என்று, இந்த தொடரின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

First published:

Tags: Cricket