முகப்பு /செய்தி /விளையாட்டு / WATCH - கடைசி ஓவர்.. 6 பந்துகளில் 6 சிக்சர்கள்.. பாகிஸ்தானில் பரபர கிரிக்கெட் போட்டி!

WATCH - கடைசி ஓவர்.. 6 பந்துகளில் 6 சிக்சர்கள்.. பாகிஸ்தானில் பரபர கிரிக்கெட் போட்டி!

இஃப்திகார் அகமத்

இஃப்திகார் அகமத்

19 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் 20ஆவது ஓவர் முடிவில் 184 ரன்களை எடுத்தது குவெட்டா கிளாடியேட்டர்ஸ்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaPakistanPakistan

பாகிஸ்தானில் நேற்று நட்பு ரீதியிலான போட்டியில், பாகிஸ்தான் வீரர் இஃப்திகார் அகமத் இறுதி ஓவரின் 6 பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார். இதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி வரும் 13ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் பெஷாவர் சல்மி அணிக்கும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கும் இடையே நேற்று நட்பு ரீதியாக போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை எடுத்தது. 19 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் 20ஆவது ஒவரில் இஃப்திகார் அகமத் 6 பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் அவர், 50 பந்துகளில் 94 ரன்களை விளாசினார்.

அடுத்து விளையாடிய பெஷாவர் சல்மி, 20 ஓவர்களின் முடிவில் 181 ரன்களை எடுத்து 3 ரன்களில் தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் 53 ரன்களும் பாபர் அசாம் 23 ரன்களையும் எடுத்தனர்.

First published:

Tags: Cricket, Pakistan cricket, Pakistan News in Tamil, T20