Home /News /sports /

Pak vs Aus-மட்டைப் பிட்ச் என்று சொல்றவங்க எல்லாம் கிரிக்கெட்டை விட்டு போயிடுங்க: பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆவேசம்

Pak vs Aus-மட்டைப் பிட்ச் என்று சொல்றவங்க எல்லாம் கிரிக்கெட்டை விட்டு போயிடுங்க: பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆவேசம்

saeed ajmal

saeed ajmal

பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடர் ரன் மழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறது. பவுலர்களுக்கு அது சுடுகாடு. சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தன் நாட்டுக்கு வரும் அணிக்கு சுடுகாட்டையே பிட்ச் ஆக பரிசளித்துள்ளது பாகிஸ்தான். ராவல் பிண்டி மைதான பிட்சின் மூலம் ஒரு தகுதியிழப்புப் புள்ளியைப் பெற்றது.

மேலும் படிக்கவும் ...

    கராச்சி இதைவிடவும் தார் ரோடு பிட்ச். ஆனால் ஆஸ்திரேலியா தன் பவுலிங் திறமையினால் அதை ஒரு டெஸ்ட் போட்டியாக மாற்றியது, ஆனாலும் புகழ் பாபர் அசாம், ஆசாத் ஷபீக், ரிஸ்வானுக்கே சென்றதே தவிர மிட்செல் ஸ்டார்க்கிற்கோ, நேதன் லயனுக்கோ செல்லவில்லை.

    இதற்கிடையில், பாகிஸ்தான் முன்னாள் ஆல்-ரவுண்டர் சயீத் அஜ்மல், விளையாடும் நிலைமைகளை கண்டிக்கும் அறிக்கைகளுக்கு கடுமையாக பதிலளித்துள்ளார். கிரிக்கெட் பாகிஸ்தான் அறிக்கையின்படி, தட்டையான ஆடுகளங்கள் குறித்து புகார் தெரிவிக்கும் எந்த ஒரு பந்து வீச்சாளரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதை விட்டுவிட வேண்டும் என்றார்.

    “விக்கெட்டுகளை எடுக்க, உங்களுக்கு மனோபாவம் தேவை. பேட்ஸ்மேன்களுடன் மைண்ட் கேம்களை விளையாட நீங்கள் 8-10 ஓவர்கள் நன்றாக வீச வேண்டும், அதன் பிறகு உங்களால் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முடியும். நீங்கள் ‘பிளாட் பிட்ச்’களைப் பற்றி புகார் செய்ய விரும்பினால், நீங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டும். சுழற்பந்து வீச்சாளர் ஆடுகளத்தைப் பார்த்து பந்துவீசப் போகிறார் என்றால், சுழற்பந்து வீச்சாளராக இருந்து என்ன பயன்? சுழற்பந்து வீச்சாளர்கள் எல்லா நிலைகளிலும் செயல்படக் கற்றுக் கொள்ள வேண்டும்,” என்றார் அஜ்மல்.

    “பாகிஸ்தான் எப்போதும் சுழற்பந்து பிட்ச்களைக் கொண்டிருக்கும் என்ற கருத்து தவறு, அப்படியல்ல. நாங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடும்போது கூட, நாங்கள் பந்தை சுழற்ற வேண்டியிருந்தது, அது ஏதோ மந்த்ரோபாயமல்ல” என்றார் அஜ்மல் மேலும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Pakistan Vs Australia

    அடுத்த செய்தி