இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்டர்களில் திறமை இருக்கிறது ஆனால் எவரிடமும் ஒரு சீரான பேட்டிங் தன்மை இல்லை ஒன்றிரண்டு போட்டிகளில் ஸ்கோர் செய்கிறார்கள் பிறகு வரிசையாக தோல்வி அடைகிறார்கள் என்கிறார் கபில் தேவ்.
இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்டர்களில் திறமை இருக்கிறது ஆனால் எவரிடமும் ஒரு சீரான பேட்டிங் தன்மை இல்லை ஒன்றிரண்டு போட்டிகளில் ஸ்கோர் செய்கிறார்கள் பிறகு வரிசையாக தோல்வி அடைகிறார்கள் என்கிறார் கபில் தேவ்.
அவரிடன் சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, “நேர்மையாகக் கூற வேண்டுமெனில் இந்த மூன்று பேரில் யாரைத் தேர்வு செய்வது என்றால் மூவருமே ஒரே மட்டத்தில்தான் இருக்கிறார்கள். பெரிய வித்தியாசம் இல்லை.
ஆனால் பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் ஒருவரை விட மற்றொருவர் சிறந்தவர்தான். மூவருமே அவர்கள் நாளில் இந்தியாவுக்கு தங்கள் கையாலேயே வெற்றியைத் தேடித்தருவார்கள். ஆனால் இந்த மூவரை விட விருத்திமான் சஹா பெட்டர் பேட்டர் என்றே கூறுவேன்.
சஞ்சு சாம்சன் மீது நான் கடும் ஏமாற்றமடைகிறேன். அவர் 1-2 போட்டிகளில் ஆடுகிறார் பிறகு சொதப்புகிறார். சீராக ஆடுவதில்லை. இவர் மீது நான் கடும் ஏமாற்றமடைகிறேன்” என்றர் கபில் தேவ்.
சஞ்சு சாம்சன் 13 டி20 போட்டிகளில் 174 ரன்கள் எடுத்துள்ளார் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடுகிறார், ஆனால் சர்வதேச கிரிக்கெட் தரம் வேறு என்பதால் அவரால் ஐபிஎல் ஃபார்மை இங்கு தொடர முடிவதில்லை.
இதனால் சஞ்சு சாம்சன் இப்போது இந்தியா-தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.