ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சச்சின் டெண்டுல்கர் மகன் என்பதால்தானே அர்ஜுனைப் பற்றி பேசுகிறோம்- கபில்தேவ்

சச்சின் டெண்டுல்கர் மகன் என்பதால்தானே அர்ஜுனைப் பற்றி பேசுகிறோம்- கபில்தேவ்

kapil dev

kapil dev

சச்சின் டெண்டுல்கர் மகன் என்பதாலேயே கடும் கவன ஈர்ப்பு பெறுவது அர்ஜுன் டெண்டுல்கருக்கு பெரிய சுமை என்கிறார் அதிரடி முன்னாள் ஆல்ரவுண்டர், உலகக்கோப்பை 1983 நாயகன் கபில்தேவ்.

 • 1 minute read
 • Last Updated :

  சச்சின் டெண்டுல்கர் மகன் என்பதாலேயே கடும் கவன ஈர்ப்பு பெறுவது அர்ஜுன் டெண்டுல்கருக்கு பெரிய சுமை என்கிறார் அதிரடி முன்னாள் ஆல்ரவுண்டர், உலகக்கோப்பை 1983 நாயகன் கபில்தேவ்.

  அர்ஜுன் டெண்டுல்கர் தன் பீல்டிங், மற்றும் பேட்டிங்கை கொஞ்சம் மேம்படுத்த வேண்டும் என்கிறார் மும்பை இண்டியன்ஸ் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட். ஏன் அவரை எடுக்க இவ்வளவு தயக்கம் என்றால் ஆட்டம் இன்னும் அவருக்கு உயர்மட்டத்திற்கான தரநிலைகளை எட்டவில்லை என்பதே உண்மை என்பதை ஷேன் பாண்ட் உடைத்து விட்டார்.

  இந்நிலையில் கபில் தேவிடமும் அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி கேட்ட போது, “நாம் ஏன் அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி பேசுகிறோம் தெரியுமா, அவர் சச்சின் டெண்டுல்கர் மகன் என்பதால்தானே. அவர் தன் கிரிக்கெட்டை ஆடட்டும் நாம் அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட வேண்டாம்.

  சச்சின் டெண்டுல்கரின் பெயர் அவர் பின்னால் ஒட்டியிருப்பதன் சாதக அம்சங்களும் உண்டு பாதக அம்சங்களும் உண்டு. டான் பிராட்மேன் மகன் தன் பெயரில் உள்ள பிராட்மேன் என்ற பெயரையே நீக்கி விட்டார், காரணம் அந்தப் பெயர் கொடுக்கும் அழுத்தம்தான்.

  எனவே அர்ஜுன் மீது அழுத்தம் கொடுக்காதீர்கள். அவர் ஒரு சின்ன பையன். கிரேட் சச்சின் டெண்டுல்கர் அர்ஜுனின் தந்தையாக இருக்கும் போது நாம் யார் அவருக்கு இது அது என்றெல்லாம் அறிவுரை வழங்க?

  ஆனாலும் அர்ஜுனுக்காக ஒன்று சொல்ல விரும்புகிறேன், ‘போ, மகிழ்ச்சியுடன் ஆடு, எதையும் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. உன் தந்தையைப் போல் 50 சதவீதம் நீ வந்தால் கூட போதும் அதைவிட சிறப்பு வேறு என்ன வேண்டும்.

  டெண்டுல்கர் என்ற பெயரே எதிர்பார்ப்புகளை கிளப்புவதுதான் ஏனெனில் சச்சின்னா சும்மாவா கிரேட் ஆச்சே” என்று கூறினார் கபில்தேவ்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL 2022, Mumbai Indians, Sachin tendulkar