சோம்பேறித்தனமாக ஆடுகிறேனா? என்னைப் பத்தி என்ன நெனைச்சிட்டு இருக்கீங்க? ரோகித் சர்மா காட்டம்

ரோகித் சர்மா

பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக், இந்தியாவின் ரோகித் சர்மா ஆகியோர் ஆடுவதை அடிக்கடி பலரும் ‘லேஸி எலிகன்ஸ்’ (‘lazy elegance’) என்பார்கள் அதாவது சோம்பேறித்தனமான ஒரு நளினம் இவரது பேட்டிங்கில் உள்ளது என்பார்கள் ஆனால் ரோகித் சர்மா இந்த வர்ணனையை மறுக்கிறார்.

 • Share this:
  நேற்று லார்ட்ஸில் அருமையான உத்தியுடன் ஸ்விங்கிங் பந்துகளை எப்படி ஆடுவது என்பதைக் காட்டினார், காலை ஓவராக நகர்த்தாமல் பந்து வந்தவுடன் மட்டையை கொண்டு சென்றால் போதுமானது, ஒரு ஸ்விங் ஆகும் பந்தை காலை நீட்டி முன்னமேயே சந்திப்பதற்குப் பதிலாக கொஞ்சம் நேரம் விட்டு பந்து வந்த பிறகு விட்டு ஆடும் உத்தி அருமையானது, இதைத்தான் ரோகித் கடைப்பிடிக்கிறார், ஒருவேளை மும்பையின் முன்னாள் இந்திய தொடக்க வீரர் லெஜண்ட் சுனில் கவாஸ்கர் இவருக்கு குருவாக இருக்கலாம்.

  83 ரன்களைப் பிரமாதமாக எடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் கால்காப்பில் வாங்கி பவுல்டு ஆனார்.

  தன்னுடைய ஆட்டத்தை சோம்பேறித்தனமான ஒரு நளினம் என்று வர்ணிப்பதை ரோகித் சர்மா ஏற்பதில்லை.

  இது தொடர்பாக அவர் கூறியதாவது:

  விளையாட்டில் சோம்பேறித்தனத்துக்கு இடமில்லை. தொலைக்காட்சியில் அப்படியாக என் ஆட்டம் தெரியலாம், ஆனால் உண்மையில் அப்படியில்லை. சோம்பேறியாக இருந்தால் களத்தில் சாதிக்க முடியாது.

  ஆட்டத்தின் முன்னணியில் நாம் இருக்க வேண்டும், எதிரணியினரை ஆதிக்கம் செலுத்துவது என்பது சோம்பேறித்தனத்தினால் முடியாதது.

  145 கிமீ வேகத்தில் ஒரு பவுலர் போடும்போது சோம்பேறியாக இருந்தால் அந்த சிக்ஸ் அடிக்க முடியுமா? சோம்பேறித் தனமாக ஆடினால் தலையில் அடிவாங்கி வெளியேற வேண்டியதுதான். எனவே இது பலருக்கும் புரியாது.

  ஆனால் இந்தியாவுக்கு ஆடத்தொடங்கிய போதிலிருந்தே இந்த லேசி எலிகன்ஸ் என் ஆட்டத்தை வருணிக்கப் பயன்படுத்தப் படுகிறது. லேசி எலிகன்ஸ், சோம்பேறி நளினம் என்ற ஒன்று கிடையவே கிடையாது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதே போல் நிறைய பேர் சொல்வார்கள், நான் ஆடும்போது ‘அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது’ இல்ல பாஸ் எனக்கு நேரமே இல்லை. பவுலர் வீசும்போது எக்ஸ்ட்ரா டைம் என்பதெல்லாம் கிடையாது. வேகமாக வீசி நம்மை சிதைத்து விடுவார்கள் எனவே நேரம் எல்லாம் இல்லை. உத்தி ரீதியாக பந்தை தாமதமாகச் சந்திக்கிறேன் என்று சொல்லலாம். சிலர் முன்னமேயே ஆடுவர், சிலர் பந்து வந்த பிறகு ஆடுவார்கள் ஆகவே கூடுதல் நேரம் குறைந்த நேரம் என்பதெல்லாம் கிடையாது.

  இவ்வாறு பல விஷயங்களை மறுத்தார் ரோகித்.
  Published by:Muthukumar
  First published: