ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வாசிம் அக்ரம் பவுல்ஸ் டு விராட் கோலி - பவுல்டா? எல்.பி.யா? யார்க்கரா? பவுண்டரியா?- என்ன ஆகும்?

வாசிம் அக்ரம் பவுல்ஸ் டு விராட் கோலி - பவுல்டா? எல்.பி.யா? யார்க்கரா? பவுண்டரியா?- என்ன ஆகும்?

வாசிம் அக்ரம் - கோலி.

வாசிம் அக்ரம் - கோலி.

இதெல்லாம் சரி, ஆனால் அவர் அடித்த 70 சதங்கள் இதையெல்லாம் ஒரு கை பார்த்துத்தானே வந்துள்ளது இது பற்றி எந்த பவுலர் என்ன கூற முடியும்?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கிரிக்கெட்டில் எப்போதும் கற்பனையான காட்சிகள் உண்மையான காட்சிகளை விட சுவாரஸ்யமாக இருக்கும். டான் பிராட்மேனுக்கு பாடிலைன் வீசிய லார்வுட் கவாஸ்கருக்கு வீசினால் என்ன ஆகும். இன்றைய ரஷீத் கான் சச்சின் டெண்டுல்கருக்கு வீசினால்.. அல்லது முரளிதரன் பென் ஸ்டோக்சுக்கு வீசினால், அல்லது கிளென் மெக்ரா கே.எல்.ராகுலுக்கு வீசினால் என்று நாம் கற்பனையை வளர்த்துக் கொண்டே போக முடியும். அதே போல் விராட் கோலிக்கு வாசிம் அக்ரம் வீசினால்... இதை வாசிம் அக்ரமே கற்பனை செய்துள்ளார்.

கிங் கோலியாக இருந்தவர் இப்போது பான் கோலியாக மாறிவிட்டார், சதம் எடுத்து 3 ஆண்டுகள் ஆகின்றன. அரைசதம் எடுக்கவே அவருக்கு வர வர மூச்சு முட்டுகிறது. இதில் வாசிம் அக்ரம் போன்ற பவுலரை சந்தித்தால் என்ன ஆவது?

வாசிம் அக்ரம் தான் கோலிக்கு வீசினால் என்ன செய்வேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

விராட் கோலி நம்பர் 3 அல்லது 4ம் நிலையில் இறங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம், அப்போது ஏற்கெனவே 2 விக்கெட்டுகள் போயிருக்கும். அப்போது கோலி கிரீசுக்கு புதிது என்றால் நான் முழுமையாக அட்டாக் செய்வேன். மிடில் ஸ்டம்பில் பந்தை பிட்ச் செய்து ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே ஸ்விங் செய்வேன். அல்லது மிடில் ஸ்டம்பிலிருந்து ஒரு இன்ஸ்விங்கர் வீசுவேன்.

சரி இது ஒர்க் அவுட் ஆகவில்லையா நான் என் பிளான் பி திட்டத்தைக் கையில் எடுப்பேன். அது பவுன்சர் வீசுவது. டீப்பில் பீல்டரை நிற்க வைத்து ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி அவரை கிரீசுக்குள் நிற்க வைப்பது என் உத்தியாகும். இப்படி சின்ன சின்ன வாய்ப்புகளை உருவாக்கினால் அவரை வீழ்த்தி விடலாம், என்று அக்ரம் நஷ்பதி பிரைம் நடத்திய ‘டு பீ ஆனஸ்ட்’என்ற நிகழ்ச்சியில் வாசிம் அக்ரம் கூறினார்.

ஆனால் வெர்னன் பிலாண்டரைக் கேட்டால் கச்சிதமாகக் கூறுவார், ஒரு 4-5 பந்துகளை 4வது ஸ்டம்பில் பிட்ச் செய்து அவுட் ஸ்விங் செய்து விட்டு ஒரு இன்ஸ்விங்கரை வீசினால் வாரிக்கொண்டு பிளிக் ஆடுகிறேன் என்று எல்.பி.ஆவார். அல்லது ஒரு 4-5 இன்ஸ்விங்கரை வீசி பிறகு ஒரு அவுட் ஸ்விங்கரை வீசி கவர் திசையை ஓப்பனாக விட்டால் கவர் ட்ரைவ் சபலத்துக்கு ஆட்பட்டு எட்ஜ் ஆவார்.

இதெல்லாம் சரி, ஆனால் அவர் அடித்த 70 சதங்கள் இதையெல்லாம் ஒரு கை பார்த்துத்தானே வந்துள்ளது இது பற்றி எந்த பவுலர் என்ன கூற முடியும்?

First published:

Tags: India vs Pakistan, Virat Kohli