இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால்? டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிகள்...

புள்ளிப்பட்டியலில் முதல் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணி 2021ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டியில் விளையாடும்.

Vijay R | news18
Updated: August 1, 2019, 5:33 PM IST
இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால்? டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிகள்...
கோப்பு படம்
Vijay R | news18
Updated: August 1, 2019, 5:33 PM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆரம்பாகி உள்ள நிலையில் இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் எதுப்போன்ற விதிமுறைகள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 போட்டிகள் வருகைக்கு பின்  டெஸ்ட் போட்டிகளுக்கான வரவேற்பு மிகவும் குறைந்து வருவதால் அதனை மேம்படுத்த ஐசிசி முடிவெடுத்தது. இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட 9 அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணியும் 6 தொடர்களில் பங்கேற்று விளையாடும். இதில் 3 தொடர்கள் வெளிநாட்டிலும், 3 தொடர்கள் சொந்த மண்ணிலும் நடைபெறும்.


ஒவ்வொரு தொடருக்கும்  120 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு தொடரில் அணிகள் 2 டெஸ்ட் போட்டியில் மோதி  ஒன்றில்  வெற்றி பெற்றால் 60 புள்ளிகள் , போட்டி சமனில் முடிந்தால் 30 புள்ளிகள், முடிவு இல்லை என்றால் 20 புள்ளிகள் வழங்கப்படும்.

ஒரு தொடரில் அணிகள்  3  டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் ஒன்றில்  வெற்றி பெற்றால் 40 புள்ளிகள் , போட்டி சமனில் முடிந்தால் 20 புள்ளிகள், முடிவு இல்லை என்றால் 13.3 புள்ளிகள் வழங்கப்படும்.

புள்ளிப்பட்டியலில் முதல் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப்போட்டியில் விளையாடும். இறுதிப்போட்டி 2021ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

Loading...

2019 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. போட்டி டிரா ஆனதால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரும் டிரா ஆனதால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி, தோல்வியை எப்படி முடிவு செய்ய முடியும் என பலர் விமர்சனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் டிராவில் முடிவடைந்தால் இரு அணிகளுக்கும் சாம்பியன்ஷிப் பகிர்ந்து அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை குறுக்கிட்டு விளையாட்டு பாதிக்கபட்டால் வேறொரு ரிசர்வ் நாளில் போட்டி நடத்தப்படும்.

ஒரு நாளின் குறிப்பிட்ட சில மணி நேரம் மழையால் தடையானால், அதே நாள் முடிவில் போட்டி தொடரும். மழை காரணத்தால் ஒரு முழு நாள் தடைப்படும்போது மட்டுமே ரிசர்வ் தினத்தில் போட்டி தொடரும்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் போட்டி இன்று தொடங்கியதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் ஆரம்பாகி உள்ளது.  டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.

Also Read : மியாமியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி!

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...