நேதன் லயன் பவுலிங்கை எதிர்கொள்வதைப் பொறுத்தவரை அதிகமாகத் திரும்பும் பந்தை ஆடாமல் விடலாம். ஆனால் அவ்வளவாக திரும்பாத சமயத்தில் ஷாட் ஆடப்போய் சிக்கவில்லை எனில் அவுட் ஆகவே வாய்ப்பு.
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் டிரா என்பது இரண்டாம்பட்சம்தான் வெற்றி பெறுவதுதான் குறிக்கோள், அதற்காகவே ஆடினோம் என்று வெற்றி நாயகன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் 97 ரன்கள் எடுத்து 406 ரன்கள் இலக்கை விரட்டி விடுவோம் என்று ஆஸி.யை மிரட்டிய ரிஷப் பந்த் பிரிஸ்பனில் 328 ரன்கள் இலக்கை பிரமாதமாக விரட்டியதில் இன்னிங்சை சிறப்பாகக் கட்டமைத்து 89 நாட் அவுட் என்று வரலாற்று வெற்றி பெறச் செய்தார்.
இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் டுடேவில் போரியா மஜும்தாரிடம் ரிஷப் பந்த் கூறியதாவது:
நார்மல் கிரிக்கெட்டை ஆடும் மனநிலையிலேயே இருந்தோம். முதல் இன்னிங்ஸில் அணி நிர்வாகமும் இதைத்தான் வலியுறுத்தியது. ரன் ஸ்கோர் செய்வதை கருத்தில் கொள்வோம் என்று அணி நிர்வாகம் கூறியது, தளர்வான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டுவதில்தான் கவனம் இருந்தது.
பிரிஸ்பனைப் பொறுத்தவரை முதலிலிருந்தே டெஸ்ட்டை வெல்வதுதான் குறிக்கோள். நான் எல்லா போட்டிகளையும் வெல்ல விரும்புகிறேன். ட்ரா என்பது இரண்டாம்பட்சம்தான்.
நேதன் லயன் பவுலிங்கை எதிர்கொள்வதைப் பொறுத்தவரை அதிகமாகத் திரும்பும் பந்தை ஆடாமல் விடலாம். ஆனால் அவ்வளவாக திரும்பாத சமயத்தில் ஷாட் ஆடப்போய் சிக்கவில்லை எனில் அவுட் ஆகவே வாய்ப்பு.
லயன் பந்து ஒன்று நன்றாகத் திரும்பியது, ஆகவே அவர் நிச்சயம் அந்தப் பந்தைதான் வீசுவார் என்பதைக் கணித்தேன். அதாவது பந்தை நன்றாகத் தூக்கி வீசி ஸ்டம்புக்கு வெளியே போகுமாறு திருப்புவார் என்றே நான் கணித்தேன். அப்படிச் செய்தால் மேலேறி வந்து அடிப்பது என்று முடிவெடுத்தேன்.
இல்லையெனில் அவரை மேலேறி வந்து அடிப்பதாக என் திட்டமில்லை. ஆனால் பந்து என் ஏரியாவில் பிட்ச் ஆனால் கிரவுண்டுக்கு வெளியே அடித்து விடுவேன்.
இவ்வாறு கூறினார் ரிஷப் பந்த்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.