ஐசிசி தலைவராக கங்குலி வருவார்... என் வாழ்நாள் பிரச்னையை நீக்குவார் - பாகிஸ்தான் வீரர் நம்பிக்கை

ஐசிசி தலைவராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டால் என் மீதான வாழ்நாள் தடையை நீக்கக்கோரி அவரிடம் முறையிடுவேன் என பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

ஐசிசி தலைவராக கங்குலி வருவார்... என் வாழ்நாள் பிரச்னையை நீக்குவார் - பாகிஸ்தான் வீரர் நம்பிக்கை
சவுரவ் கங்குலி
  • Share this:
பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேனிரியா கங்குலி ஐசிசி தலைவராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஐசிசி தலைவராக தற்போதுள்ள இந்தியாவின் சஷாங்க் மனோகர் பதவிகாலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இவர் பதவியில் தொடர மீண்டும் விருப்பம் தெரிவிக்கவில்லை.

ஐசிசி-யின் அடுத்தத் தலைவராக சவுரவ் கங்குலி வர வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். கொரோனாவிற்கு பின் கிரிக்கெட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல ஐசிசி-க்கு வலுவான தலைமை தேவைப்படுகிறது. அதற்கு சவுரவ் கங்குலி தான் பொறுத்தமாக இருப்பார்கள் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்டு தலைவர் கிரீம் ஸ்மித் தெரிவித்திருந்தார்.


தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேனிரியாவும் கங்குலி ஐசிசி தலைவராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஐசிசி தலைவராக கங்குலி வரவேண்டும். இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியவர் கங்குலி.

தற்போது பிசிசிஐ தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி தகுதியானவர். ஐசிசி-யின் தலைவராக கங்குலிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆதரவு இல்லாவிட்டாலும் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும்

அவர் ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் என் வாழ்நாள் கிரிக்கெட் தடையை நீக்க அவரிடம் முறையிடுவேன். அவர் மூலமாக ஐசிசியின் ஆதரவு எனக்கு கிடைக்கும்“ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேனரியா சூதாட்ட புகாரில் சிக்கியதில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading