Home /News /sports /

ஷாஹின் அப்ரிடி மட்டும் ஐபிஎல் ஆடினா அவருக்கு ரூ.15 கோடி நிச்சயம் - அஸ்வின்

ஷாஹின் அப்ரிடி மட்டும் ஐபிஎல் ஆடினா அவருக்கு ரூ.15 கோடி நிச்சயம் - அஸ்வின்

அப்ரீடி

அப்ரீடி

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடமில்லை. ஆனால் அந்த அணியின் இடது கை சுல்தான் ஆஃப் ஸ்விங் ஷாஹின் அப்ரீடி மட்டும் ஐபிஎல் தொடரில் ஆடினால் அவரை ரூ.14-15 கோடிக்கு ஏலம் போயிருப்பார் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடமில்லை. ஆனால் அந்த அணியின் இடது கை சுல்தான் ஆஃப் ஸ்விங் ஷாஹின் அப்ரீடி மட்டும் ஐபிஎல் தொடரில் ஆடினால் அவர் ரூ.14-15 கோடிக்கு ஏலம் போயிருப்பார் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய டாப் ஆர்டரை விரைவில் வீட்டுக்கு அனுப்பி இந்திய அணியின் வெற்றியை தட்டிப் பறித்த பாகிஸ்தான் அணியின் இடதுகை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இல்லாமலே பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டதென்றால், எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் அவர் அணியில் இருந்தால் பாகிஸ்தான் அணி கூடுதல் பலத்தோடு வீரியமாக செயல்படும் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

    இது தொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது: கடந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போது சதாப்கான் மற்றும் ஹாரிஸ் ரவுப் ஆகிய இருவரும் மிக சிறந்த முறையில் பந்து வீசினர். ஆனால் அதற்கு முக்கிய காரணம் ஷாஹீன் அப்ரிடியின் ஆக்ரோஷமான பந்துவீச்சு தான். அவர் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் விக்கெட்டை சரித்துவிட்டார்.

    மேலும் படிக்க: பாகிஸ்தான் சோத்தை தின்னுட்டு இந்திய வெற்றியைக் கொண்டாடுவீர்களா? - ஆப்கான் ரசிகர்கள் மீது பாக்.ரசிகர்கள் ஆவேசம்

    அவர் பாகிஸ்தான் அணியில் இடம் பெறாமல் போனது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. நான் எப்பொழுதும் வியப்பதெல்லாம் ஒருவேளை ஷாஹீன் அப்ரிடி ஐபிஎல் தொடரின் ஏலத்தில் இடம்பெற்றால் என்ன நடக்கும் என்பது தான். உயரமான இடதுகை வேகப்பந்து வீச்சாளர், சிறந்த ஃபார்மில் இருக்கிறார், போட்டியின் இறுதி நேரங்களில் யாக்கர் மழை பொழிபவர் , நிச்சயம் 14 முதல் 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பார்”  இவ்வாறு கூறியுள்ளார் அஸ்வின்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: IPL, Pakistan Cricketer, R Ashwin

    அடுத்த செய்தி