Home /News /sports /

சேவாக் கமெண்ட்டுக்கு பொங்கிய ஷோயப் அக்தர்- நான் த்ரோ எறிபவனா? அவர் என்ன ஐசிசியை விட அறிந்தவரா?

சேவாக் கமெண்ட்டுக்கு பொங்கிய ஷோயப் அக்தர்- நான் த்ரோ எறிபவனா? அவர் என்ன ஐசிசியை விட அறிந்தவரா?

அக்தர்-சேவாக்

அக்தர்-சேவாக்

ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் அளித்த பேட்டியில் ஷோயப் அக்தர் ஓடி வந்து முழங்கையை மடக்கி த்ரோ எறிவார், ஆனால் பிரெட் லீ கை நேராக வரும் என்பதால் அவரை கணித்து விட முடியும் ஆனால் அக்தர் கை எங்கு மடங்கி எப்படி வரும் என்றே தெரியாது என்றும் அக்தருக்கு தான் த்ரோ செய்கிறோம் என்பதும் தெரியும் இல்லையென்றால் ஐசிசி அவரை ஏன் தடை செய்ய வேண்டும் என்று பேச அது ஷோயப் அக்தரை கிளறி விட்டது.

மேலும் படிக்கவும் ...

    இதற்கு பதிலடி கொடுத்த ஷோயப் அக்தர், “இப்படிப்பட்ட கருத்துகளை சேவாக் கூற வேண்டாம் என்று நான் கெஞ்சி கேட்கிறேன், சேவாகுக்கு ஐசிசியை விட அதிகம் தெரிந்தால் அவர் கருத்தை அவர் கூற தகுதி உண்டு. ஆனால் சேவாகுக்கான என் பதில் கொஞ்சம் வித்தியாசமானது.

    இந்திய அணியின் மிகச்சிறந்த மேட்ச் வின்னர் சேவாக். அவர் டீம் மேன், அவர் இந்தியாவுக்காக மிகச்சிறந்த ஓப்பனிங் பிளேயராக ஆடியுள்ளார். இப்போது என் வயது மற்றும் நான் இருக்கும் நிலை என்னுடைய கருத்துகளை நான் வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது. அதாவது கவனமாகவே நான் என் கருத்துக்களைக் கூறும் வயதில் இருக்கிறேன்.

    தேசிய மட்டத்தில் ஆடிய சேவாக் போன்ற ஒரு வீரரை நான் இன்சல்ட் செய்ய விரும்பவில்லை. நான் அவர் அளித்த பேட்டியை இன்னும் பார்க்கவில்லை. சேவாக் எனக்கு நெருங்கிய நண்பர்தான், ஆனால்ல் அவர் சீரியசாகச் சொன்னாரா இல்லை ஜோக்காக சொன்னாரா என்று தெரியவில்லை.

    இந்தியா-பாகிஸ்தான் இருநாட்டு உறவுகளை சிக்கலாக்குமாறு கருத்துக்களை இருநாட்டு வீரர்களும் சொல்லக் கூடாது, கவனமாக கருத்து கூற வேண்டும். இரு நாட்டு உறவுகளும் மேம்படுவதற்கான சுவடு இருந்தால் நான் பாலமாக செயல்படுவேன். சமூக ஊடகக் காலக்கட்டத்தில் சேவாக் இப்படிப்பட்ட கருத்துக்களை கூறுவதில் கவனமாக இருக்க வேண்டும்” என்று கொதிப்பை உள்ளுக்குள் அடக்கி வெளியில் சமத்காரமாக பேசியுள்ளார் அக்தர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Virender sehwag

    அடுத்த செய்தி