தோனி அடித்த அந்த ஒரு சிக்ஸ்தான் உலகக்கோப்பை என்றால் யுவராஜ் சிங் 6 உலகக்கோப்பையை வென்றிருப்பார்: தனிநபர் துதிபாடுவது பற்றி கவுதம் கம்பீர் எரிச்சல்

தோனி அடித்த அந்த ஒரு சிக்ஸ்தான் உலகக்கோப்பை என்றால் யுவராஜ் சிங் 6 உலகக்கோப்பையை வென்றிருப்பார்: தனிநபர் துதிபாடுவது பற்றி கவுதம் கம்பீர் எரிச்சல்

கம்பீர்.

2011 உலகக்கோப்பையை 10 ஆண்டுகளுக்கு முன்பாக வென்ற நாள் இன்று, அதாவது ஏப்ரல் 2. தோனி அடித்த வின்னிங் ஷாட் போஸ்டர் ஷாட்டாக மாறி வீடுகளில் சுவற்றில், பீரோக்களில் ஒட்டி வைக்கப்பட்ட ஷாட்டானது. ஆனால் ‘உலகக்கோப்பையை வென்று கொடுத்த சிக்ஸ்’ என்றெல்லாம் தனிநபர் துதிபாடுவது கூடாது என்று கவுதம் கம்பீர் எரிச்சலுடன் கண்டித்துள்ளார்.

 • Share this:

  உண்மையில் கம்பீர் எரிச்சலில் நியாயமிருக்கிறது, அந்த இறுதிப் போட்டியில் கவுதம் கம்பீர் 97 ரன்களை எடுத்தார், கோலியுடன் மிக முக்கியமான கூட்டணி அமைத்தார், பிறகு தோனி வந்தவுடன் ஒரு சதக்கூட்டணி அமைத்தார். அனைத்திற்கும் மேலாக அன்று ஜாகீர் கானெல்லாம் அதிக ரன்களைக் கொடுக்க பரிபாத முனாப் படேல், இன்று ரசிகர்களின் மனதிலிருந்து அழிக்கப்பட்ட முனாப் படேல் 9 ஓவர் 41 ரன்கள்தான் கொடுத்தார், யுவராஜ் சிங், சங்கக்கார, திலன் சமரவீரா விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார். ஒரு அணியாக வென்றதைத்தான் குறிப்பிட வேண்டுமே தவிர தோனியின் ஆளுமையில் கொழிக்கும் வணிக நலன்களை ஊக்குவிக்கும் விதமாக ‘உலகக்கோப்பையை வென்ற அந்த ஒரு சிக்ஸ்’ என்று சதா கூப்பாடு போட்டுக் கொண்டேயிருப்பது சீரிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதென்னவோ உண்மைதான்.  இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் கவுதம் கம்பீர் கூறும் போது, “ஒரேயொரு நபர் உலகக்கோப்பையை நமக்கு வென்று கொடுத்தார் என்று நம்புகிறீர்களா? அப்படி ஒரு தனி நபர் உலகக்கோப்பையை வென்று கொடுக்கிறார் என்று வைத்துக் கொண்டால் இந்திய அணியில் அனைவருமே ஒவ்வொரு உலகக்கோப்பையை வென்று கொடுதிருப்பார்கள்.

  துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் ஒரு தனிநபரை வழிபடுவது ஓவராகப் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. தனிநபர்களுக்கு வேலையில்லை பங்களிப்புகள் தான் பேசும். அணி ரீதியாக டீமாக ஆடும் விளையாட்டுக்களில் தனிநபர் பங்களிப்பு என்றுதான் பேச முடியும்.

  ஜாகீர் கானின் பங்களிப்பை மறப்பீர்களா? பைனலில் 3 மெய்டன்களை வீசுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜ் பங்களிப்பை என்ன சொல்வீர்கள்? அல்லது சச்சின் டெண்டுல்கரின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சதத்தை என்ன சொல்வீர்கள். ஏன் எப்ப பார்த்தாலும் அந்த ஒரு சிக்சரையே பேச வேண்டும்? ஒரு சிக்ஸ்தான் உலகக்கோப்பையை வென்றது என்றால் யுவராஜ் சிங்கின் 6 சிக்சர்கள் 6 உலகக்கோப்பையை வென்று கொடுத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். 2007, 2011 உலகக்கோப்பைகளில் அவர்தான் நாயகன். ஆனால் மீண்டும் மீண்டும் தோனியின் அந்த சிக்சரைப் பற்றியே பேசுகிறீர்கள்” என்று பொரிந்து தள்ளினார்.
  Published by:Muthukumar
  First published: