கோலியின் நெருக்கடியால் குப்ளேவை நீக்கினார்கள்: எடுல்ஜி பரபரப்பு புகார்

#ViratKohli Can Get His Way With #RaviShastri, Why Can’t #HarmanpreetKaur | கேப்டன் கோலி, ராகுல் ஜோஹ்ரிக்கு தொடர்ச்சியாக மெசேஜ் அனுப்பி கும்ப்ளேயை நீக்குமாறு நெருக்கடி கொடுத்தார் என்று எடுல்ஜி கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: December 12, 2018, 1:55 PM IST
கோலியின் நெருக்கடியால் குப்ளேவை நீக்கினார்கள்: எடுல்ஜி பரபரப்பு புகார்
விராட் கோலியுடன் ரவிசாஸ்திரி (Twitter/RaviShastri)
Web Desk | news18
Updated: December 12, 2018, 1:55 PM IST
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த குப்ளேவை, கோலியின் நெருக்கடியால் நீக்கினார்கள் என்று பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் எடுல்ஜி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவார் பதவிக்காலம் கடந்த 30-ம் தேதி உடன் முடிந்தது. புதிய பயிற்சியாளருக்கான தேர்வு வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ரமேஷ் பவாரை மீண்டும் பயிற்சியாளராக்க வேண்டும், டி-20 உலகக் கோப்பைக்கு தயாராக அவரது ஆலோசனை வேண்டும் என்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Harmanpreet Kaur, Ramesh Pawor
ஹர்மன்ப்ரீத் கவுர் (இடது), ரமேஷ் பவார்


பயிற்சியாளர் தேர்வு குறித்து நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் மற்றும் பிசிசிஐ தலைமை செயல் அதிகாரிக்கு நிர்வாகக்குழு உறுப்பினர் எடுல்ஜி இமெயில் அனுப்பியுள்ளார். அதில், நிர்வாகக்குழு வலியுறுத்தியும் அனில் கும்ப்ளே தலைமைப் பயிற்சியாளராகத் தொடர்வதை விராட் கோலி எதிர்த்தார். அதேபோல், மகளிர் அணியின் கேப்டனும், துணை கேப்டனும் பயிற்சியாளராக பவார் நீடிக்க வேண்டும் என்கின்றனர் இதை மட்டும் ஏன் அனுமதிக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Diana Edulji
பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி


“கோலி, ராகுல் ஜோஹ்ரிக்கு தொடர்ச்சியாக மெசேஜ் அனுப்பி கும்ப்ளேயை நீக்குமாறு நெருக்கடி கொடுத்தார். உடனே அவர் பேச்சைக் கேட்டு பயிற்சியாளரை மாற்றிவிட்டீர்கள். ரவி சாஸ்திரி கடைசி தேதிக்குள் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை, அவருக்காக காலக்கெடு நீட்டிக்கப்பட்டது, இது விதிமுறை மீறல் என்று நான் அப்போதே எதிர்த்தேன். கும்ப்ளே, இந்த விஷயத்தில் அவமானப்படுத்தப்பட்டார், வில்லனாகச் சித்தரிக்கப்பட்டார்.” என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

கும்ப்ளேயின் கண்டிப்பான பயிற்சிமுறைகளைப் பிடிக்காத கேப்டன் விராட் கோலி பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரிக்கு, தொடர்ந்து கும்ப்ளேயைப் பற்றி அடிக்கடி மெசேஜ் அனுப்பிய கடும் நெருக்கடி கொடுத்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Also Watch...

First published: December 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...