ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

விராட் கோலி வந்த பிறகு... கத்தி யார் மேல் விழும்?- ஜாஃபரின் விநோத பரிந்துரை

விராட் கோலி வந்த பிறகு... கத்தி யார் மேல் விழும்?- ஜாஃபரின் விநோத பரிந்துரை

Virat Kohli

Virat Kohli

கான்பூர் டெஸ்ட் முடிவு இன்று 5ம் நாள் தெரிந்து விடும், நிச்சயம் நியூசிலாந்துக்கு மிக மிக கடினம், பிட்ச், அம்பயரிங்கை எதிர்த்துப் போராடுவது கடினம். இந்நிலையில் மும்பையில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு கோலி வருகிறார், யாரை தூக்குவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கான்பூர் டெஸ்ட் முடிவு இன்று 5ம் நாள் தெரிந்து விடும், நிச்சயம் நியூசிலாந்துக்கு மிக மிக கடினம், பிட்ச், அம்பயரிங்கை எதிர்த்துப் போராடுவது கடினம். இந்நிலையில் மும்பையில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு கோலி வருகிறார், யாரை தூக்குவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

ஷ்ரேயஸ் அய்யரை இன்னும் 10 டெஸ்ட் போட்டிகளுக்கு அசைக்க முடியாது. ரகானே, புஜாரா ஒழுங்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட வேண்டும் ரஞ்சி டிராபியில் ஆட வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட் என்றாலே ஐபிஎல் என்றாகி விட்டது, கிரிக்கெட் ஆட்டத்தின் நுட்பச் சீரழிவுக்கு ஐபில் கிரிக்கெட் தான் காரணம், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்.

இந்நிலையில் விராட் கோலி வந்துவிட்டால் யாரை எடுப்பது என்ற சந்தேகத்துக்கு வாசிம் ஜாஃபர் சுவாரஸ்யமான ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார்: “மாயங்க் அகர்வால் அல்லது அஜிங்கிய ரகானே இருவரில் ஒருவர் இடம் நிச்சயம் காலி. விராட் கோலி உள்ளே வர வேண்டுமெனில் இவர்களில் யார் இருப்பது அல்லது உட்காருவது என்பதில்தான் கடைசி முடிவு இருக்கிறது.

மெல்போர்ட்ன் டெஸ்ட் சதத்துக்குப் பிறகு ரகானே சரியாக ஆடவில்லை. 10-12 டெஸ்ட் போட்டிகள் ஒன்றுமில்லை. ஆனால் ரகானே மீது கத்தி விழுந்தால் அதுமிகவும் கடினமான ஒரு முடிவு. ஆனால் யார் மீது கத்தி விழுகிறது என்று தெரியவில்லை.

மாயங்க் அகர்வாலைத் தூக்கினால் விருத்திமான் சாஹாவை தொடக்க வீரர் ஆக களமிறக்கலாம். சகா ஓப்பனிங் இறங்கினால் மற்ற பேட்டிங் நிலைகளும் மாற வேண்டியதில்லை. இந்தியப் பிட்ச்களில் சாஹாவை இறக்கலாம் தவறில்லை. தென் ஆப்பிரிக்கா தொடரிலெல்லாம் அவரை இறக்க முடியாது, இங்கு சாஹாவை இறக்கிப் பார்க்கலாம்” என்றார்.

Also Read: IND vs NZ : தொடரும் நடுவர்களின் விளையாட்டு! பந்துகள் உருளும் பிட்ச்: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

மாயங்க் அகர்வால் 30 ரன்களை இந்த டெஸ்ட்டில் எடுத்துள்ளார். ரகானே 35 மற்றும் 4 ரன்கள். ஆனால் புஜாராவை ஏன் விட்டு வைக்க வேண்டும்? அவருக்குப் பதிலாக கோலியை இறக்க வேண்டியதுதான்.

Also Read: வெற்றியைச் சுவைக்குமா இந்தியா?- த்ரில் நிலையில் கான்பூர் டெஸ்ட்

ஆனால் சாஹா முதலில் காயத்திலிருந்து விடுபட வேண்டும், அப்போதுதான் வாசிம் ஜாஃபர் ஆலோசனை சரியாக இருக்க முடியும்.

First published:

Tags: India vs New Zealand, Virat Kohli