‘ராக்ஸ்டார்’ஜடேஜா வேகப்பந்து வீச்சுக்கு மாறுவாரா? : இந்திய அணியில் இடம் வேண்டி ஸ்பின்னரின் ஆதங்கம்

ஜடேஜா.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அனாயாச வாள்சுழற்றியான ரவீந்திர ஜடேஜா வேகப்பந்து வீச்சுக்கு மாறினால் மட்டுமே இந்திய அணியில் எனக்கும் குல்தீப் யாதவுக்கும் இடம் கிடைக்குமென மற்றொரு ஸ்பின்னர் யஜுவேந்திர சகால் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அனாயாச வாள்சுழற்றியான ரவீந்திர ஜடேஜா வேகப்பந்து வீச்சுக்கு மாறினால் மட்டுமே இந்திய அணியில் எனக்கும் குல்தீப் யாதவுக்கும் இடம் கிடைக்குமென மற்றொரு ஸ்பின்னர் யஜுவேந்திர சகால் தெரிவித்துள்ளார்.

  இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டி அணிகளிலிருந்து அஸ்வின் தேவையில்லாமல் ஓரங்கட்டப்பட்டார், ஜடேஜாவையும் ஓரங்கட்டப்பார்த்தனர், ஆனால் அவர் தனது ஆல்ரவுண்ட் திறமைகளினால் தன்னை அப்படியெல்லாம் ஒதுக்கி விட முடியாது என்பதை நிரூபித்து வருகிறார்.

  இந்நிலையில் இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான யஜுவேந்திர சகால், குல்தீப் யாதவ் இடம்பெற்று கலக்கினர்.

  ஆனால் உலகக்கோப்பை 2019-ல் இங்கிலாந்தில் கடைசியாக இருவரும் சேர்ந்து ஆடிய போது சகால் 88 ரன்கள் விளாசப்பட்டார், விக்கெட் இல்லை, அதே போட்டியில் குல்தீப் யாதவ் 72 ரன்கள் வாரி வழங்கி ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார்.

  இதனையடுத்து இந்தக் கூட்டணியை கேப்டன் விராட் கோலி உடைத்தார். பிறகு இருவரும் சேர்ந்து களமிறங்க முடியவில்லை.

  இந்திய அணியின் முன்னாள் லெக் ஸ்பின்னர் லஷ்மண் சிவராம கிருஷ்ணன் சமீபத்தில் கூறிய போது சகால், குல்தீப்பின் சரிவு தனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்றார்.

  இந்நிலையில் சகால் கூறியதாவது:

  நானும், குல்தீப்பும் இணைந்து எந்த தொடராக இருந்தாலும் சரி, பாதிக்கு பாதி போட்டிகளில் விளையாடி விடுவோம். 5 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் அவர் 3 அல்லது நான் 3 போட்டிகளில் விளையாடுவோம். அப்போது ஹர்திக் பாண்ட்யாவும் அணியில் இருந்தார், பந்து வீசினார். அவர் இருந்தவரையிலும் எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

  2018 ல் ஹர்திக் பாண்ட்யா காயம் அடைந்தார். அதேநேரம் இந்திய அணிக்கு 7 வது இடத்தில் களமிறங்க அணிக்கு 'ஆல் ரவுண்டர்' தேவைப்பட்டது. இந்த இடத்தை ஜடேஜா பிடித்து விட்டார். பேட்டிங்கிலும் ஜொலித்தார். துரதிருஷ்டவசமாக ஜடேஜா சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். ஒருவேளை இவர் வேகப்பந்து வீச்சாளராக இருந்திருந்தால் எனக்கும், குல்தீப்புக்கும் அணியில் இடம் கிடைத்திருக்கும். அணியில் நான் விளையாடவில்லை என்றாலும், இந்திய அணி வெற்றி பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Published by:Muthukumar
  First published: