தொடரை இந்தியா வென்றால் டெஸ்ட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி இதுதான்: ஷோயப் அக்தர் எதிர்பார்ப்பு

தொடரை இந்தியா வென்றால் டெஸ்ட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி இதுதான்: ஷோயப் அக்தர் எதிர்பார்ப்பு

சோயிப் அக்தர்

இந்திய அணிக்குத்தான் அனைத்துப் பெருமையும் போய்ச் சேரும், என்ன தைரியமாக ஆடுகிறார்கள்.. என்ன தைரியம்!!

 • Share this:
  அடிலெய்ட் டெஸ்ட் 2வது இன்னிங்சில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, மெல்போர்னில் எழுச்சி வெற்றி பெற்று பிறகு சிட்னியில் 5ம் நாள் அன்று 407 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி அதிரடி முயற்சி மேற்கொண்டு பிறகு காயத்துடன் போராடி டிரா செய்த இந்திய அணியை வானளாவ புகழ்கிறார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் ஷோயப் அக்தர்.

  இது தொடர்பாக யூடியூப் சேனலில் அவர் கூறியது:

  இப்போது இந்திய-ஆஸ்திரேலிய தொடரின் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளோம். தொடரை வெல்ல இந்தியாவிடம் அனைத்தும் உள்ளது. காயங்கள் அணியை பின்னுக்கு இழுக்கின்றன. ஆனாலும் இந்திய அணியில் பெஞ்சில் இருக்கும் வீரர்களும் வலுவாகவே உள்ளனர். இதை வைத்து தான் கூறுகிறேன் இந்திய அணி தொடரை வெல்ல முடியும் என்று.

  வெற்றியை நோக்கிய ஒரு கடைசி புஷ், அவர்களால் முடியும். இந்த நிலையிலிருந்து இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றினால் இது மிகப்பெரிய, மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் டெஸ்ட் வரலாற்றின் மிகப்பெரிய தொடர் வெற்றியாக இது இருக்கும்.

  மீண்டும் கூறுகிறேன், இந்தியா வெற்றி பெற்றால், இந்தியாதான் வெற்றி பெறப்போகிறது, என்றால் இந்தியா ஆடியதிலேயே இதுதான் மிகச்சிறந்த டெஸ்ட் தொடராக இருக்கும்.

  இந்திய அணிக்குத்தான் அனைத்துப் பெருமையும் போய்ச் சேரும், என்ன தைரியமாக ஆடுகிறார்கள்.. என்ன தைரியம்!! ஒட்டுமொத்த அணியும், பின் வரிசை வீரர்கள், பவுலர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள், பும்ரா அனைத்து ஆற்றலையும் செலுத்துகின்றனர். பும்ரா தன் காயத்தையும் பொருட்படுத்தாமல் ஆடுகிறார். தொடரை கை நழுவவிடவில்லை இந்திய அணி.

  இவ்வாறு கூறினார் ஷோயப் அக்தர்.
  Published by:Muthukumar
  First published: