Home /News /sports /

சர்வதேச கிரிக்கெட் என்பதே வெறும் உலகக்கோப்பையாக மாறிவிடும்: கபில் எச்சரிக்கை

சர்வதேச கிரிக்கெட் என்பதே வெறும் உலகக்கோப்பையாக மாறிவிடும்: கபில் எச்சரிக்கை

kapil dev

kapil dev

உலக கிரிக்கெட் வணிக மயமாகி தனியார் கிரிக்கெட்டின் ஆக்கிரமிப்பு ஊடுருவத் தொடங்கி இப்போது வியாபிக்கவும் தொடங்கியுள்ளது. இப்படியே போனால் கால்பந்தில் எப்படி கிளப் கால்பந்து ஆதிக்கம் பெருகி சர்வதேச கால்பந்து என்பது நாடுகளுக்கு இடையே நடைபெறாமல் வெறும் உலகக்கோப்பையில் மட்டுமே, ஐரோப்பிய கோப்பையில் மட்டுமே நாடுகள் மோதும் நிலை ஏற்பட்டது போல் கிரிக்கெட்டிலும் ஏற்படும் என்று கபில் தேவ் எச்சரித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    உலக கிரிக்கெட் வணிக மயமாகி தனியார் கிரிக்கெட்டின் ஆக்கிரமிப்பு ஊடுருவத் தொடங்கி இப்போது வியாபிக்கவும் தொடங்கியுள்ளது. இப்படியே போனால் கால்பந்தில் எப்படி கிளப் கால்பந்து ஆதிக்கம் பெருகி சர்வதேச கால்பந்து என்பது நாடுகளுக்கு இடையே நடைபெறாமல் வெறும் உலகக்கோப்பையில் மட்டுமே, ஐரோப்பிய கோப்பையில் மட்டுமே நாடுகள் மோதும் நிலை ஏற்பட்டது போல் கிரிக்கெட்டிலும் ஏற்படும் என்று கபில் தேவ் எச்சரித்துள்ளார்.

    ட்ரெண்ட் போல்ட் அன்று நியூசிலாந்து கிரிக்கெட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார், இப்படியே பணமழை தனியார் கிரிக்கெட் ஆக்கிரமித்தா டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் காலியாகிவிடும், ஐசிசி இதனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும், தங்களுக்கும் பணம் வருகிறது என்று இதை கண்டுகொள்ளாமல் விட்டால் தேசங்களுக்கு இடையிலான கிரிக்கெட் மெல்லச் சாகும் என்கிறார் கபில் தேவ்.

    இது பற்றி பிரபல சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகையில் அவர் கூறியது:

    “இது சர்வதேச கிரிக்கெட்டை அழித்து வருவதாக நான் நினைக்கிறேன். இந்த விளையாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் ஐசிசிக்கு பெரிய பொறுப்புள்ளது. தற்போதைய கிரிக்கெட் வளர்ச்சி ஐரோப்பாவில் நிலவும் கால்பந்தை நோக்கி செல்கிறது. அதில் ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுக்கு எதிராக விளையாடாமல் 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் (உலகக்கோப்பையில்) மோதிக்கொள்கிறார்கள். எனவே கால்பந்தை போல உலக கோப்பையில் மட்டும் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடி விட்டு எஞ்சிய நேரங்களில் கிளப் போட்டிகளில் விளையாட போகிறோம்.

    இதோடு நாட்டுக்காக ஆடாமல் பணத்துக்காக ஆடுகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் அல்லது பிக்பேஷ் போன்ற தொடர்களில் விளையாடினால் போதும் என்று நினைக்கிறார்களா? எனவே இந்த அம்சத்தில் ஐசிசி அதிக நேரத்தை செலவழித்து கிளப் கிரிக்கெட்டுக்கு மத்தியில் எப்படி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற முடியும் என்று பார்க்க வேண்டும்.

    கிளப் கிரிக்கெட், ஐபிஎல் மற்றும் பிக்பேஷ் போன்ற தொடர்கள் நீண்டகாலம் நடைபெற்று வருகிறது. இதோடு தற்போது தென்னாப்பிரிக்கா, துபாய் போன்ற தொடர்களும் வந்துள்ளதால் அனைத்து வீரர்கலும் கிளப் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவார்கள். மேலும் சர்வதேச கிரிக்கெட் உலகக் கோப்பையில் மட்டும் விளையாட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்”

    இவ்வாறு கபில் தேவ் எச்சரித்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, IPL, T20

    அடுத்த செய்தி