ரஹானே கேப்டன்சியை நான் பாராட்டினால், மும்பை வீரரை ஆதரிக்கிறேன் என்று கதை கட்டுவார்கள்: சுனில் கவாஸ்கர் குத்தல்

ரஹானே கேப்டன்சியை நான் பாராட்டினால், மும்பை வீரரை ஆதரிக்கிறேன் என்று கதை கட்டுவார்கள்: சுனில் கவாஸ்கர் குத்தல்

சுனில் கவாஸ்கர்

ரஹானே கேப்டன்சியில் 2 டெஸ்ட் போட்டிகளை நான் பார்த்தவரையில் பீல்டர்களை எங்கு நிற்க வைக்க வேண்டும் என்பது பற்றிய விஷயம் அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

 • Share this:
  மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அணித்தேர்வு, களவியூகம், அஸ்வினை முன்னமேயே பவுலிங்கில் கொண்டு வந்து ஸ்மித்தை, லபுஷேனைக் காலி செய்தது, கேப்டனாக நின்று வழிநடத்தி முக்கியமான சதமெடுத்தது ஆகியவற்றினால் கவாஸ்கர் ரஹானே மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டுள்ளார்.

  ஆனால் தான் அதற்குள் அவரை ‘தனித்துவமான கேப்டன்’ பிரமாதம் என்றெல்லாம் சொன்னால் மும்பைக்காரரைத் தூக்கிப் பிடிக்கிறேன் என்று என்னையே சாடுவார்கள் என்று கவாஸ்கர் புகழ்வதையும் அடக்கிக் கொண்டார்.

  இது தொடர்பாக கவாஸ்கர் கூறியதாவது, “நாம் விரைவுகதியில் முடிவுகளுக்குள் குதிக்க வேண்டாம். நான் அவரது கேப்டன்சி தனித்துவமாக உள்ளது, அபாரம் என்றால் நான் மும்பைக்காரருக்கு கொடிபிடிக்கிறேன் என்ற அவப்பெயர் தான் எனக்கு வரும். இதோடு விடுமா அந்தக் குற்றச்சாட்டுகள்?

  எனவே நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை, அவரும் இப்போதுதான் கேப்டன்சியில் இறங்கியிருக்கிறார். பார்ப்போம்.

  ரஹானே கேப்டன்சியில் 2 டெஸ்ட் போட்டிகளை நான் பார்த்தவரையில் பீல்டர்களை எங்கு நிற்க வைக்க வேண்டும் என்பது பற்றிய விஷயம் அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

  பவுலர்களும் பீல்டுக்குத் தக்கவாறு வீசிவிட்டால் அதுதான் கேப்டன்சியின் வெற்றி ரகசியம் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் அதனால்தன 195 ரன்களுக்கு மடிந்தனர். ரஹானே கேப்டன்சி மட்டுமல்ல அஸ்வின், பும்ரா பவுலிங் செய்த விதம். சிராஜ் முதல் போட்டியிலேயே அபாரமாக வீசிய விதம்.

  அதுவும் 2வது செஷனில்தான் ரஹானே சிராஜைக் கொண்டு வருகிறார், ஆனால் அப்படியும் அவர் தளராமல் நல்ல வேகம் வீசி பேட்ஸ்மென்களை படுத்தினார்.

  அஸ்வின் மிடில் அண்ட் லெக்கில் வீசுகிறார், ஆஃப் சைடில் அதிக ரன்களை எடுக்காமல் செய்து விடுகிறார்” என்றார் சுனில் கவாஸ்கர்.
  Published by:Muthukumar
  First published: