‘நான் நின்றால் நீங்கள் தொலைந்தீர்கள்’- ரிஷப் பண்ட் மைண்ட் வாய்ஸ்
‘நான் நின்றால் நீங்கள் தொலைந்தீர்கள்’- ரிஷப் பண்ட் மைண்ட் வாய்ஸ்
ரிஷப் பந்த்
டெஸ்ட் போட்டிகளிலும் சரி ஒருநாள், டி20 போட்டிகளிலும் சரி ரிஷப் பண்ட் தன் செல்வாக்கை கட்டமைத்து வருகிறார், மற்ற வீரர்களும் இவரை உதாரணமாகக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளிலும் சரி ஒருநாள், டி20 போட்டிகளிலும் சரி ரிஷப் பண்ட் தன் செல்வாக்கை கட்டமைத்து வருகிறார், மற்ற வீரர்களும் இவரை உதாரணமாகக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் 111 பந்துகளில் 146 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட், இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் விளாசி அசத்தினார், 3வது ஒருநாள் போட்டியில் அசத்தலான வெற்றிச் சதம் எடுத்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் தன் முதல் சதத்தை எடுத்து மூன்று வடிவ ஆதிக்க வீரர் ஆனார் ரிஷப் பண்ட்.
ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் பெரிய அளவில் மேம்பாடு கண்டு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, பேட்டிங்கில் 71 ரன்களை 58 பந்துகளி விரைவு கதியில் எடுத்து ரிஷப் பண்ட்டுடன் 133 ரன்கள் கூட்டணி அமைத்து இங்கிலாந்திடமிருந்து ஆட்டத்தைப் பிடுங்கிச் சென்றார்.
அதுவும் கடைசியில் டேவிட் வில்லேயை ஒரே ஓவரில் 5 பவுண்டரி என்று மைதானம் முழுக்க அடித்து நொறுக்கி அவரை கொன்றே விட்டார் ரிஷப் பண்ட், இதன் மூலம் சொல்லவருவது என்னவெனில் நான் நின்றால் நீங்கள் தொலைந்தீர்கள் என்கிறார்.
இதைத்தான் ஜாகீர் கான் வேறு வகையில் கூறுகிறார்:
பண்ட் ஆடியது மற்றவீரர்களுக்கு ஓர் உதாரணம். அந்தக் கூட்டணி மேட்ச் வின்னிங் கூட்டணியாகும். மொத்தமாக அந்தப் போட்டியே அருமையாக இருந்தது. பந்துக்கும் மட்டைக்குமான சரிசமமான போட்டி இருந்தது. இங்கிலாந்து தொடங்கியதைப் பார்க்கும் போது நிறைய அழுத்தம் இருந்தது.
ஆனால் பண்ட்டும், பாண்டியாவும் காட்டிய ஒரு உறுதி, நம்பிக்கை அதுதான் விசேஷம். இருவரும் கூட்டணி அமைக்க ஒருவர் கடைசி வரை நின்று வெற்றி பெறச் செய்தார். இந்த வரிசையில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு இதைத்தான் உதாரணமாகக் காட்ட வேண்டும்.
அதே போல் ரிஷப் பண்ட் தன் செல்வாக்கை எப்படி கட்டமைக்கிறார் என்றால் ‘ஏய்! நான் கிரீசில் இருக்கும் வரை நான் வெற்றியைப் பெற்றுத் தருவேன்’ என்பது போல் ஆடுகிறார். இது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமல்ல, டெஸ்ட் மேட்ச்களிலும் அவர் இந்த செல்வாக்கைக் காட்டி வருகிறார்.
இந்த ஒருநாள் சதம், டெஸ்ட் சதம் அவரை தொடர்ந்து இப்படி ஆடுவதற்கு நம்பிக்கை அளித்தால் அவர் சதமெடுப்பது என்பது அவருக்கு ஒரு பழக்கமாகவே மாறிவிடும். அப்படி மாறிவிட்டால் மிடில் ஆர்டரின் வலு இன்னும் கூடுதலாகும்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.