லாகூர் டெஸ்ட் டில் 351 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கடைசி நாள் அன்று 300க்கும் கீழ்தான் தேவைப்பட்டது, ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு 10 விக்கெட்டுகள் தேவைப்பட்டன. முதல் இன்னிங்சில் 20 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்த பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸில் 70 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியா 24 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக பாகிஸ்தானில் ஆடிய போது 1-0 என்று மார்க் டெய்லர் கேப்டன்சியில் வெற்றி பெற்றது. இப்போது பாட் கமின்ஸ் சாதித்துள்ளார், அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் வெற்றியில் 4-0வுடன் இப்போது பாகிஸ்தானிலும் கொடி நாட்டி, பழைய ஆஸ்திரேலியா போல் உள்நாடு, 2வெளிநாடு இரண்டிலும் கொடிநாட்டியுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டேபிளில் ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் 5இல் வென்று 3 ட்ராவுடன் 72 புள்ளிகளுடன் 75% உடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவும் 5 போட்டிகளில் 3 வெற்றியுடன் 36 புள்ளிகள் பெற்றுந்தாலும் 75% உடன் 2ம் இடத்தில் உள்ளது இந்திய அணி 12 போட்டிகளில் 6 வெற்றியுடன் 3 தோல்வியுடன் 2 ட்ராவுடன் அதிகப் புள்ளிகளுடன் 77 புள்ளிகளில் 3ம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 7-ல் 3 வெற்றிகளுடன் 2 ட்ராக்களுடன் 2 தோல்விகளுடன் 44 புள்ளிகள் பெற்று 52.38% உடன் 4ம் இடத்தில் உள்ளன. நியூசிலாந்து 28 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும், பங்களாதேஷ் 7ம் இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் 8-ம் இடத்திலும் இங்கிலாந்து கடைசி இடத்திலும் உள்ளன.
நேற்று நேதன் லயன் 5 விக்கெட்டுகளையும் பாட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பாட் கமின்ஸ் இந்த டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
பாகிஸ்தானுக்கு ஒரு தைரியமான டிக்ளேர் மூலம் வாய்ப்புக் கொடுத்த பிறகு, கேப்டன் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவை 2016 க்குப் பிறகு முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் வெற்றிக்கு அழைத்துச் சென்றதால், ஆசியாவில் 11 ஆண்டுகால வறட்சியையும் முடிவுக்குக் கொண்டுவந்தார்.
ஸ்டீவன் ஸ்மித் நேதன் லயன் பந்து வீச்சில் இடது காலணிக்கு அருகில் ஒரு கூர்மையான கேட்சை எடுத்தபோது, தேநீருக்குப் பிறகு கேப்டன் பாபர் அசாம் 55 ரன்களில் வீழ்ந்தபோது பாகிஸ்தானின் நம்பிக்கை வீழ்ந்தது. ஸ்லிப்பில் ஒரு மோசமான தொடருக்குப் பிறகு, ஸ்மித் ஒரு பெரிய தருணத்தில் பிராயச்சித்தம் செய்து ஆஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 70 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தொடரை 0-1 என்று இழந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.