India vs NewZealand | உலகக் கோப்பை வரலாற்றில் எந்த அணி ’கிங்’?

உலகக் கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்து மண்ணில் 3 முறை மோதியுள்ளன. இதில், நியூசிலாந்து அணியே வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது

India vs NewZealand | உலகக் கோப்பை வரலாற்றில் எந்த அணி ’கிங்’?
இந்தியா Vs நியூசிலாந்து
  • News18
  • Last Updated: July 7, 2019, 5:06 PM IST
  • Share this:
உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. நடைபெற்ற லீக் சுற்றில் இந்த இரு அணிகளும் மோதிய போட்டி மழையால் ரத்தானதால் சம பங்கு புள்ளிகள் வழங்கபட்டது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் 106 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 55 ஆட்டங்களில் இந்தியாவும், 45 ஆட்டங்களில் நியூசிலாந்தும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி 'டை'-யில் முடிந்துள்ளது, 5 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை பொறுத்தவரை இவ்விரு அணிளும், இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.இதில், இந்தியா 3 ஆட்டங்களிலும், நியூசிலாந்து 4 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.


அதில், 1975-ம் ஆண்டு தொடரில், 'ஏ' பிரிவில் இடம் பிடித்திருந்த இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொண்டது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு ட்ரஃபோர்டு (Old Trafford,) மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் ஆடிய இந்தியா 230 ரன்கள் சேர்த்தது.பின்னர், இலக்கை விரட்டிய நியூசிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

1979-ல் உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், நியூசிலாந்திடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது

1987-ல் தொடரில் நடப்புச் சாம்பியன் என்ற அசுர பலத்துடன் இந்திய அணி, 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில், நியூசிலாந்தை எதிர்கொண்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களம் கண்ட இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. இலக்கை துரத்திய நியூசிலாந்து, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால், 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா, நியூசிலாந்துக்கு எதிராக உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

மேலும், இதே தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது லீக் ஆட்டத்திலும் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில், சுனில் கவாஸ்கர் 103 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

இதன் பின்னர், 1992 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மேலும், நடப்புத் தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள்  மோதவுள்ள நாட்டிங்ஹாம் (, Nottingham) டிரென்ட் பிரிட்ஜ் (Trent Bridge) மைதானத்தில் தான், 1999 உலகக் கோப்பையில், சூப்பர் சிக்ஸ் பிரிவில் இவ்விரு அணிகளும் மோதின. அந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது.

பின்னர், இறங்கிய நியூசிலாந்து 48 புள்ளி 2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்கள் சேர்த்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வாகை சூடியது.

பின்னர், 2003 உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸ் பிரிவில் இவ்விரு அணிகளும் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 146 ரன்களில் சுருண்டது. எளிய இலக்கை விரட்டிய இந்தியா 40 புள்ளி 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது.

இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில், 4 விக்கெட்டுகள் வீழ்த்தி நியூசிலாந்தை கட்டுப்படுத்திய ஜாகீர் கான் ஆட்டநாயகனாக தேர்வானார்.

இதையடுத்து, 2007, 2011, 2015 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டதில்லை.

மேலும், உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் இங்கிலாந்து மண்ணில் 3 முறை மோதியுள்ளன. இதில், நியூசிலாந்து அணியே வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது

இதற்கு, நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

Also watch: ரயில்வே துறை தனியார் மயமானால் ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம்? எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் பேட்டி 

First published: July 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading