தொடங்கியது டெஸ்ட் சாம்பியன்ஷிப்... டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு...!

இறுதி போட்டி 2021ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

Vijay R | news18
Updated: August 1, 2019, 4:16 PM IST
தொடங்கியது டெஸ்ட் சாம்பியன்ஷிப்... டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு...!
ENGvAUS
Vijay R | news18
Updated: August 1, 2019, 4:16 PM IST
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் பிரிமிங்காம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதனையடுத்து முதன்முறையாக நடத்தப்பட உள்ள உலக டெஸ்ட் சாம்பயின் தொடர் தொடங்கியுள்ளது.

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பெய்னி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். உலகக் கோப்பை தொடருக்கு பின் இங்கிலாந்து அணி மோதும் மிகப் பெரிய தொடராக இது அமைந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் இடம்பெறவில்லை. இங்கிலாந்து அணியில் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆர்ச்சர் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர், பென்கார்ஃபட் களமிறங்கி உள்ளனர்.


படிக்க... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட மொத்தம் 9 அணிகள் மோதுகின்றன.

போட்டியிடும் அணிகள் பெறும் வெற்றி, தோல்வி புள்ளிகளின் அடிப்படையில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் மோதும். இறுதி போட்டி 2021ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

Loading...

Also Read : மியாமியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி!

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...