இங்கிலாந்து செல்லும் முன் இந்திய வீரர்களுக்கு 6 முறை கொரோனா பரிசோதனை; நெகட்டிவ் வந்தால் மட்டுமே அனுமதி

இந்திய கிரிக்கெட் அணி

தற்போது மும்பையில் 14 நாட்கள் தனிமையில் இருக்கும் கோலி தலைமை இந்திய அணி வீரர்களுக்கு 6 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

  • Share this:
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய-நியூஸிலாந்து வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    தற்போது மும்பையில் 14 நாட்கள் தனிமையில் இருக்கும் கோலி தலைமை இந்திய அணி வீரர்களுக்கு 6 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதில் நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்திய அணியினர் வருகிற 2-ந்தேதி தனிவிமானத்தில் புறப்பட்டு மறுநாள் இங்கிலாந்தை அடைகிறார்கள். வீரர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும்.

    அங்கு சென்றதும் இந்திய வீரர்கள் நேரடியாக சவுத்தம்டன் மைதான பகுதியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு, நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்துலை தொடங்குவார்கள். தனிமைப்படுத்தலின் போதும் முறையாக பரிசோதனை நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனிமைகாலம் எத்தனை நாட்கள் என்ற விவரத்தை ஐ.சி.சி. குறிப்பிடவில்லை.

    அதே போல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இங்கிலாந்து வந்துள்ள நியூசிலாந்து அணியினர் 3 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின் பயிற்சியைத் தொடங்கினர்.

    இவர்கள் உலக டெஸ்ட் பைனலுக்கான பாதுகாப்பு வளையத்துக்குள் ஜூன் 15ம் தேதி அனுமதிக்கப்படுவார்கள். டெஸ்ட் பைனலுக்கு முன் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்படும்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பாக முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று அதில் புள்ளிகள் பட்டியலில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் டாப் 2 அணியாக முடிந்தன. இந்த பைனல் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.
    Published by:Muthukumar
    First published: