ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 2ஆவது இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 2ஆவது இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய அணி 14 ஆட்டங்களில் விளையாடி 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியா 13 ஆட்டங்களில் விளையாடி 9 போட்டிகளில் வென்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன் பாயிண்ட்ஸ் டேபிளில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தொடர் வெற்றியின் மூலமாக, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தக்கவைத்து கொண்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் பெரும் வெற்றியின் சதவீதத்தின் அடிப்படையில், 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்த உலகச் சாம்பியன்ஷிப் முறை 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் 2021 –ல் இறுதிப்போட்டி, அதிகபட்ச வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடத்தப்பட்டது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

INDvsBan : அஸ்வின்- அக்சர் படேல் அதிரடி : டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் அடுத்த ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகள் தயாராகி வந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியதை தொடர்ந்து, பாயின்ட்ஸ் டேபிளில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

வெற்றி சதவீதம் 76.92 உடன் 120 புள்ளிகளைப் பெற்று ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருக்கிறது. வெற்றி சதவீதம் 58.93 உடன் 99 பாயிண்டுகளை பெற்று இந்தியா தற்போது 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தென்ஆப்பிரிக்கா அணி இருக்கிறது.

ஏலத்தின் முதல் நாள் இரவு பதற்றத்தால் தூங்காமல் தவித்தேன்: சம் கரன் நெகிழ்ச்சி

தென்ஆப்பிரிக்க அணியின் வெற்றி சதவீதம் 54.55. கடந்த 2 ஆண்டுகளில் 11 மேட்சுகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா, 6-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி 14 ஆட்டங்களில் விளையாடி 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியா 13 ஆட்டங்களில் விளையாடி 9 போட்டிகளில் வென்றுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தகுதியான அணிகள் ஜூன் 2023 –ல் இறுதி செய்யப்பட்டு விடும்.

First published:

Tags: Cricket