முகப்பு /செய்தி /விளையாட்டு / ICC WTC: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியாவின் இடம்

ICC WTC: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியாவின் இடம்

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் மற்றும் இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் முடிவுகளுக்குப் பிறகு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம்:

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் மற்றும் இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் முடிவுகளுக்குப் பிறகு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம்:

கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவும் நியூசிலாந்தும் ஃபைனலில் மோதின. நியூசிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. ஆனால் இம்முறை இந்த இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் பின் தங்கியுள்ளன. இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் இந்தியா 2-1 என்று முன்னிலையே வகிக்கிறது, வரும் மே மாதம் இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளும் போது மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்கிறதா தோற்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி அதில் வெற்றி பெற்று 100 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்துவந்த இலங்கை அணி, இந்தியாவிடம் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, 66.66 என்ற வெற்றி சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது. 2ம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல்:

ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடி 4-0 என தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி, 86.66 வெற்றி சதவிகிதத்துடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிராவானதற்கு பிறகும் முதலிடத்திலேயே தான் நீடிக்கிறது. ஆனால் வெற்றி சதவிகிதம் 77.77 சதவிகிதமாக குறைந்துள்ளது.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டிக்கு பின்னரும், ஆஸ்திரேலியா முதலிடத்திலும், பாகிஸ்தானும் இரண்டாமிடத்திலும் தான் உள்ளன. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவிகிதம் 86.66 சதவிகிதத்திலிருந்து 77.77 சதவிகிதமாக குறைந்துள்ளது. பாகிஸ்தான் அணி 66.66 வெற்றி சதவிகிதத்துடன் 2ம் இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோற்ற இலங்கை அணி 100 சதவிகிதத்திலிருந்து 66.66 சதவிகிதமாக குறைந்து புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.

தென்னாப்பிரிக்க அணி 60 வெற்றி சதவிகிதத்துடன் 4ம் இடத்தில் உள்ளது. இந்திய அணி இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்கு பிறகும் புள்ளி பட்டியலில் 5ம் இடத்திலேயே நீடிக்கிறது. ஆனால் வெற்றி சதவிகிதம் 54.16%ஆக அதிகரித்துள்ளது. புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 6ம் இடத்திலும், இங்கிலாந்து அணி கடைசி இடத்திலும் உள்ளன.

First published:

Tags: ICC World Test Championship, India vs srilanka, Pakistan Vs Australia