மழையினால் கைவிடப்படும் போட்டிகள்... புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றங்கள்!

ICC World Cup 2019 | Points Table | புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது தான் பெரிய திருப்புமுனையாக உள்ளது.

Vijay R | news18
Updated: June 11, 2019, 8:16 PM IST
மழையினால் கைவிடப்படும் போட்டிகள்... புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றங்கள்!
ICC World Cup
Vijay R | news18
Updated: June 11, 2019, 8:16 PM IST
உலகக் கோப்பை தொடரில் இதுவரை 3 போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டதால் புள்ளிப்பட்டியிலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

உலகக் கோப்பை தொடரில் மழையின் காரணமாக கைவிடப்பட்ட இன்றைய போட்டியையும் சேர்த்து மொத்தம் 16 லீக் போட்டிகள் நிறைவடைந்து உள்ளன.

இதில் 3 போட்டிகளில் விளையாடி உள்ள நியூசிலாந்து அணி எந்த போட்டியிலும் தோல்வியடையாமல் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.இங்கிலாந்து அணி 2 வெற்றி 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.

இந்திய அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 3வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 4வது இடத்திலும் உள்ளது. புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது தான் பெரிய திருப்புமுனையாக உள்ளது. அந்த அணி பங்கேற்ற 2  போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால் 2 புள்ளிகளை பெற்றது. இலங்கை 4 போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வி, 2 முடிவு இல்லை என மொத்தம் 4 புள்ளிகளை பெற்றுள்ளது.

புள்ளிப்பட்டியலில் 6 மற்றும் 7வது இடங்களில் 3 புள்ளிகளுடன் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் உள்ளன. பாகிஸ்தான் ரன்ரேட் விகிதத்தில் வங்கதேச அணிக்கு அடுத்த நிலையில் உள்ளது.

அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்று கணிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறாமல் பரிதாப நிலையில் உள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் மழைகுறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் 1 புள்ளியை மட்டும் பெற்று 7வது இடத்தில் உள்ளது. 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி ஏதும் பெறாமல் கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது.

Also Watch

First published: June 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...