அடுத்தமுறை இவர்கள் இருக்கமாட்டார்கள்... இதுவே கடைசி உலகக் கோப்பை...!

ICC World Cup 2019 | தென்ஆப்ரிக்காவின் ஜே.பி.டுமினி, இம்ரான் தாஹிர், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவுக்கும் இதுவே கடைசி உலகக் கோப்பை.

அடுத்தமுறை இவர்கள் இருக்கமாட்டார்கள்... இதுவே கடைசி உலகக் கோப்பை...!
ICC World Cup 2019
  • News18
  • Last Updated: June 28, 2019, 4:03 PM IST
  • Share this:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் , சோயிப் மாலிக், ஹசிம் ஆம்லா, விடைபெறவுள்ளனர். மேலும், மகேந்திர சிங் தோனி, ரோஸ் டெய்லரும் அடுத்த உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு இல்லை. 

உலகக் கோப்பையில் ஒருமுறையாவது களமிறங்கிவிட வேண்டும் என்பது தான் அனைத்து விளையாட்டு வீரர்களின் கனவாக இருக்கும். அந்த வகையில் கிரிக்கெட்டை பொறுத்தவரை, உலகக் கோப்பை சாதனையுடன் வீரர்கள் விடைபெறுவது வழக்கம். சிலர், தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, அந்த முடிவுக்கு தள்ளப்படுவதும் ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் காணமுடிகிறது.

Shoaib Malik, சோயப் மாலிக்
சோயப் மாலிக். (ICC)பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் சோயிப் மாலிக், இதுவே தனது கடைசி உலகக் கோப்பை என்று ஏற்கனவே அறிவித்து விட்டார். ஆல்ரவுண்டரான  இவர், பாகிஸ்தான் அணிக்காக 20 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

37 வயதாகும் மாலிக், 284 ஒருநாள் போட்டிகளில் 9 சதங்கள், 44 அரைசதங்களுடன் 7 ஆயிரத்து 526 ரன்கள் சேர்த்துள்ளார். பேட்டிங் சராசரி 35 .14, ஸ்டிரைக் ரேட் 81 .91 என உள்ளது.

Hashim Amla, ஹசிம் அம்லா
தென்னாப்ரிக்காவின் ஹசிம் அம்லா
தென்னாப்ரிக்க அணியின் தூணாக விளங்கும் ஹசிம் ஆம்லாவுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை. சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி, தென்ஆப்ரிக்காவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இவர், அதிவேகமாக 5 ஆயிரம், 6 ஆயிரம் மற்றும் 7 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளார்.

36 வயதாகும் இவர், 174 ஒருநாள் போட்டிகளில் 27 சதங்கள், 37 அரைச்சதங்களுடன் 7 ,910 ரன்கள் சேர்த்துள்ளா. பேட்டிங் சராசரி 46 .64 , ஸ்டிரைக் ரேட் 49.97 ஆகவும் உள்ளது.

Ross Taylor, ராஸ் டெய்லர்
ராஸ் டெய்லர்


நியூசிலாந்து அணியின் அனுபவ வீரரான ரோஸ் டெய்லர், இதுவே தனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என கூறியுள்ளார். அதிரடி ஆட்டக்காரரான இவர், தனியாளாக போராடி, பல்வேறு போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அத்துடன், ஒருநாள் கிரிகெட்டில் 20 சதங்கள் விளாசிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் தன்வசம் கொண்டுள்ளார்.

35 வயதாகும் ரோஸ் டெய்லர், 218 ஒருநாள் போட்டிகளில், 20 சதங்கள், 47 அரைசதங்களுடன் 8,026 ரன்கள் சேர்த்துள்ளார். பேட்டிங் சராசரி 48.34, ஸ்டிரைக் ரேட் 83.37 ஆகவும் உள்ளது.

உலகக்கோப்பை 2019


இதற்கிடையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி, 4-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் களம் கண்டுள்ளார். விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான இவர், விரைவில் ஓய்வுபெறவுள்ளதாக அண்மையில் அறிவித்தார்.

எனவே, இதுவே அவருக்கு கடைசி உலகக் கோப்பை தொடராக பார்க்கப்படுகிறது. தோனி தலைமையில், 2011-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 37 வயதான தோனி, இதுவரை 341 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 10 சதங்கள், 71 அரைசதங்களுடன் மொத்தம் 10,500 ரன்கள் குவித்துள்ளார்.

பேட்டிங் சராசரி 50.72 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 87. 55 ஆகவும் உள்ளது. ஓர் இன்னிங்சில் அதிகபட்சமாக 183 ரன்கள் விளாசியுள்ளார்.

இவர்களுடன், தென்ஆப்ரிக்காவின் ஜே.பி.டுமினி, இம்ரான் தாஹிர், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவுக்கும் இதுவே கடைசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராகவும் அமைத்துள்ளது.

Also Read :  புதிய சாதனை படைத்த 'ரன்மெஷின்' விராட் கோலி!

Also Read : 'அவுட்டா இது?' அம்பயர் முடிவால் விரக்தியடைந்த ரோஹித் சர்மா மனைவி - வீடியோ

Also Read : சச்சினின் இமாலய சாதனையை முறியடிக்கக் காத்திருக்கும் வார்னர்...!

Also Watch

First published: June 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading