CWC19 | முன்னேறியது இந்தியா! வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்

6வது வீரராக களமிறங்கிய தோனி பொறுமையாக விளையாடி 61 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Vijay R | news18
Updated: June 27, 2019, 11:05 PM IST
CWC19 | முன்னேறியது இந்தியா! வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்
INDvWI
Vijay R | news18
Updated: June 27, 2019, 11:05 PM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியிலில் 2வது இடத்திற்கு முன்னேறியது.

உலகக் கோப்பை தொடரின் 34வது லீக் போட்டியில் இந்தியா - மேற்கிந்திய தீவுககள் அணி மோதின. மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினார். ரோஹித் சர்மா 18 ரன்கள் எடுத்திருந்த போது ரோச் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இதை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தில் ஈடுப்பட்டார்.




Loading...



நிதானமாக ஆடிய விராட் கோலி அரைசதம் விளாசி 72 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் கே.எல்.ராகுல்(48), விஜய் சங்கர் (14), கேதர் ஜாதவ் (7) ரன்களிலும் அவுட்டாகினர்.6வது வீரராக களமிறங்கிய தோனி பொறுமையாக விளையாடி 61 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி உடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அதிரடி வீரர் கெய்லை 6 ரன்னிலும், ஹோப்பை 5 ரன்னிலும் ஷமி அவுட்டாக்கி அசத்தினார்.

சீரான இடைவெளியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்டை இந்திய அணி பவுலர்கள் வீழ்த்தினர். மேற்கிந்திய தீவுகள் அணி 143 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்து  தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷமி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.



இந்திய அணியுடனான போட்டியில் தோல்வியடைந்ததால் ஆப்கான், தென்னாப்பிரிக்கா அணிகளை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணியும் அரையிறுதிவாய்ப்பை இழந்தது. இந்திய அணி 11 புள்ளிகள் பெற்று 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.



Also Watch

First published: June 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...