இங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நிதானமாக ஆடிய நியூசிலாந்து அணி 241 ரன்கள் எடுத்துள்ளது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து வெற்றி பெற்றது. அதே போல் இங்கிலாந்து அணி 2-வது பேட்டிங்கில் வெற்றி பெற்றதால் எந்த அணி வெற்றி பெறும் என்ற பரபரப்புடன் போட்டி தொடங்கியது.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக குப்தீல், நிக்கோல்ஸ் களமிறங்கினார்கள். இந்த தொடர் முழுவதும் சொதப்பிய குப்தீல் இந்தப் போட்டியிலும் 19 ரன்களில் வோக்ஸ் பந்துவீச்சில் அவுட்டாகினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திர வீரரான கேப்டன் வில்லியம்சன் பொறுமையாக விளையாடினார்.
இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சில் நியூசிலாந்து அணி வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறி வந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சிற்கு இணையாக நியூசிலாந்து அணியும் பந்து வீச்சில் மிரட்டினால் உலகக் கோப்பையை வெல்வதற்கு கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.