ENGvsAFG | இமாலய வெற்றி பெற்று முதலிடத்திற்கு முன்னேறியது இங்கிலாந்து!

ICC World Cup 2019 | England vs Afghanistan | கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் நூர் அலி டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

Web Desk | news18
Updated: June 18, 2019, 10:49 PM IST
ENGvsAFG | இமாலய வெற்றி பெற்று முதலிடத்திற்கு முன்னேறியது இங்கிலாந்து!
ENGvsAFG
Web Desk | news18
Updated: June 18, 2019, 10:49 PM IST
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தொடரின் 24வது லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக வின்ஸ், பேரிஸ்டோவ் களமிறங்கினர். வின்ஸ் 26 ரன்களிலும், பேரிஸ்டோவ் 90 ரன்களிலும் அவுட்டாகினர்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கன் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறவிட்டார். மார்கன் 71 பந்துகளில் 4 பவுண்டரி, 17 சிக்சர்கள் விளாசி 148 ரன்கள் குவித்தார். மார்கன் அதிரடியால் இங்கிலாந்து அணியின் ரன் மளமளவென உயர்ந்தது.



இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரின் அதிகப்பட்ச ரன் இதுவாகும்.

கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் நூர் அலி டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கன் அணி வீரர்கள் திணிறினார்.



சீரான இடைவெளியில் ஆப்கன் அணியின் விக்கெட்களை இங்கிலாந்து வீழ்த்தியது. இறுதியாக ஆப்கனிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் மட்டுமே எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சாஹிடி 76 ரன்கள் குவித்தார். இந்த போட்டியின் வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
First published: June 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...