ஆப்கானிஸ்தான் அணிக்கு 312 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டிஸ் அணி.
உலகக்கோப்பைத் தொடரின் 42-வது லீக் போட்டி ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டிஸ்அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் நிதானமாக விளையாடிய எவின் லெவிஸ் அரை சதம் கடந்து 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாய் ஹோப் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய நிகோலஸ் புரான் 58 ரன்களுக்கும் ஜேசன் ஹோல்டர் 45 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 50-ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்தது.
Some fantastic hitting from the West Indies middle-order sees them set Afghanistan 312 to win!
— Cricket World Cup (@cricketworldcup) July 4, 2019
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் தவ்லட் ஜத்ரான் 2 விக்கெட்டுகளையும், முகமது நபி, ரஷித் கான், சாயத் ஷிர்ஜாத் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
Also Watch
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.