ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 'ஜாக்பாட்'... இதுவரை இல்லாத அளவிற்கு பரிசுத்தொகை அறிவிப்பு

உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 'ஜாக்பாட்'... இதுவரை இல்லாத அளவிற்கு பரிசுத்தொகை அறிவிப்பு

World Cup 2019

World Cup 2019

10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் போட்டி உட்பட மொத்தம் 46 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கும் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி உலகக் கோப்பை வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் போட்டி உட்பட மொத்தம் 46 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

உலகக்கோப்பையில் இறுதி போட்டியில் வெல்லும் அணிக்கு அதிகபட்ச பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணி மற்றும் இதர அணிகளுக்கும் பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படும்.

அதன்படி இந்த உலகக்கோப்பைக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ₹70.11 கோடி) பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பையை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் 28.05 கோடி) பரிசாக வழங்கப்படும். 2வது இடம்ப பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 14.02 கோடி) கோடி வழங்கப்பட உள்ளது.

இறுதிப்போட்டியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 5.61 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. மேலும் லீக் போட்டிகளில் ஒவ்வொறு போட்டியிலும் வெற்றிப் பெறும் அணிக்கு 40 ஆயிரம் டாலர்கள் (ரூ.28,05,128) பரிசு வழங்கப்படும். லீக் சுற்றை கடந்துவிட்ட அணிகளுக்கு ஒரு லட்சம் டாலர் (ரூ.70,12,820) பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Watch

First published:

Tags: ICC Cricket World Cup 2019