உலகக் கோப்பைத் தொடரில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்த வெஸ்ட் இண்டிஸ்!

உலகக் கோப்பைத் தொடரில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்த வெஸ்ட் இண்டிஸ்!

வெஸ்ட் இண்டிஸ்

2019 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டிஸ் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டிஸ் அணி. 

    உலகக்கோப்பைத் தொடரின் 42-வது லீக் போட்டி ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் நிதானமாக விளையாடிய எவின் லெவிஸ் அரை சதம் கடந்து 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாய் ஹோப் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய நிகோலஸ் புரான் 58 ரன்களுக்கும் ஜேசன் ஹோல்டர் 45 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 50-ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்தது.

    312 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது ஆப்கானிஸ்தான் அணி. தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தாலும் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.  ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக  இக்ரம் அலி கில் 86 ரன்கள் விளாசினார். ரஹ்மத் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    50-ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் வெஸ்ட் இண்டிஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    இந்த உலகக்கோப்பைத் தொடரில் வெஸ்ட் இண்டிஸ் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

    Also Watch

    Published by:Prabhu Venkat
    First published: