உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 2 வீரர்கள்... தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி...!

#ICC #WorldCup2019: Two Tamilnadu Players Announced in #WorldCup #IndianSquad | கடும் ஆலோசனைகளுக்குப் பிறகு கூட்டத்தின் முடிவில், விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #VijayShankar

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 2 வீரர்கள்... தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி...!
விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக்.
  • News18
  • Last Updated: April 15, 2019, 4:57 PM IST
  • Share this:
2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ம் தேதி கடைசி நாளாகும். முதலில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி தேர்வு செய்வதற்காக மும்பையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தேர்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கடும் ஆலோசனைகளுக்குப் பிறகு கூட்டத்தின் முடிவில், விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Indian Team Squad WC
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)


மூத்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். தோனிக்கு அடுத்து 2-வது விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இளம் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார். எந்த வரிசையில் களமிறக்கினாலும் விளையாடக் கூடியவர்.உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி:

விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா.

#BREAKING | உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!இணைபிரியா நட்பென்றால் இப்படி இருக்கனும்... ஒரே தட்டில் சாப்பிட்ட தோனி - ஜாதவ்!

உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

ஒற்றை இலக்க ரன்களில் சுருண்ட வீரர்கள்! டெல்லி அணியிடம் தோற்ற ஹைதராபாத்
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்