Home /News /sports /

எப்போதும் அவர் பினிஷராக இருப்பார் என்று எதிர்பார்க்கக் கூடாது - தோனிக்கு ஆதரவாக டெண்டுல்கர் குரல்

எப்போதும் அவர் பினிஷராக இருப்பார் என்று எதிர்பார்க்கக் கூடாது - தோனிக்கு ஆதரவாக டெண்டுல்கர் குரல்

சச்சின் உடன் தோனி

சச்சின் உடன் தோனி

உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியுள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணியை சந்தித்தது. நேற்று முன் தினம் நடந்த இந்தப்போட்டியில் மழை குறுக்கிட்டதால், மீதமுள்ள ஆட்டம் நேற்று நடந்தது.

இந்தியாவுக்கு 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரோஹித், ராகுல், கோலி என முதல் 3 வீரர்களும் 1 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

ஜடேஜா, தோனி இறுதிகட்டத்தில் போராடியும் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. தோனி ரன் அவுட் ஆனது விமர்சிக்கப்பட்டாலும், தொடக்க வீரர்கள் சொதப்பியதே மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், ”எனக்கு பெரிய அதிருப்தியாக இருப்பது, 240 என்பது சேஸ் செய்யக்கூடிய இலக்குதான். இது மிகப்பெரிய எண்ணிக்கையெல்லாம் இல்லை. இந்தியாவின் முதல் 3 விக்கெட்டுகளை எடுத்து நியூசிலாந்து பவுலர்கள் கனவை கலைத்துவிட்டனர்.

ஆனால், ரோஹித் சர்மா எப்போதும் நல்ல தொடக்கத்தை கொடுப்பார் அல்லது விராட் கோலி ஒரு உறுதியான அடித்தளம் அமைப்பார் என்று எப்போதும் எண்ணிக்கொண்டு இருக்க முடியாது. அவர்களைச் சுற்றியிருக்கும் வீரர்களும் அதிக பொறுப்புகளை இது போன்ற நேரத்தில் ஏற்க வேண்டியது இருக்கும்” என்று கூறினார்.



தோனியின் ரன் அவுட் குறித்து பேசிய சச்சின், “தோனி வந்து ஆட்டத்தை பினிஷ் செய்வார் என்று எப்போதும் எதிபார்ப்பது சரியாக இருக்காது. அவர் அதை மீண்டும் மீண்டும் செய்திருந்தார் என்றாலும் கூட, எதிர்பார்க்கக் கூடாது. நீங்கள் நியூசிலாந்தின் பந்து வீச்சை பார்த்து இருப்பீர்கள், சரியான பகுதியில் பந்து வீசினார்கள். வில்லியம்சனின் கேப்டன்ஷிப் அருமையாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

ஜடேஜா கேட்ச்; தோனியின் ரன்அவுட்! ஆட்டத்தின் போக்கைத் திசைமாற்றிய தருணங்கள்

மைதானத்தில் டான்ஸ் ஆடிய பும்ரா! அனுபமாவை வைத்து கலாய்த்த நெட்டிசன்ஸ்

Published by:Sankar
First published:

Tags: ICC Cricket World Cup 2019, Sachin tendulkar

அடுத்த செய்தி