#NZvSA | டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த நியூசிலாந்து!

ICC World Cup 2019 | New Zealand vs South Africa | நியூசிலாந்து அணியோ 4 போட்டிகளில் 7 புள்ளிகளை பெற்று அரையிறுதி பந்தயத்தில் முன்னணியில் உள்ளது. இந்தியாவுடான போட்டி ரத்தானதால் 10 நாள் இடைவெளிக்குப் பிறகு நியூசிலாந்து களம் காண்பது தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமான அம்சமாக இருக்கக்கூடும்.

Web Desk | news18
Updated: June 19, 2019, 4:33 PM IST
#NZvSA | டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த நியூசிலாந்து!
நியூசிலாந்து அணி வீரர்கள்
Web Desk | news18
Updated: June 19, 2019, 4:33 PM IST

#NZvSA  | தென் ஆப்பிரிக்காவுக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.


உலகக் கோப்பைத் போட்டித் தொடரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தென்னாப்பிரிக்க அணி துவக்கத்திலேயே சறுக்கலை சந்தித்துள்ளது.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி பின்தங்கியுள்ளது. இன்னும் நான்கு போட்டிகள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், அடுத்த 4 போட்டிகளை வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழலில் தென்னாப்பிரிக்கா உள்ளது.

பிர்மிங்ஹாமில் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

தென்னாப்பிரிக்காவுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையில் இன்றைய போட்டியில் மிக வலுவான நிலையில் உள்ள நியூசிலாந்துடன் மோதுகிறது. இந்த போட்டியில் தோற்றால் தென்னாப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதால் முழுத்திறனை வெளிப்படுத்த அந்த அணி போராடியே தீரும்.

நியூசிலாந்து அணியோ 4 போட்டிகளில் 7 புள்ளிகளை பெற்று அரையிறுதி பந்தயத்தில் முன்னணியில் உள்ளது. இந்தியாவுடான போட்டி ரத்தானதால் 10 நாள் இடைவெளிக்குப் பிறகு நியூசிலாந்து களம் காண்பது தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமான அம்சமாக இருக்கக்கூடும்.

இந்தநிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Also Watch: வேலைக்கு ஏன் போகவில்லை? கேள்வி கேட்ட கர்ப்பிணியை கொலை செய்த கணவர்!

First published: June 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...