Home /News /sports /

#BREAKING | உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

#BREAKING | உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணி. (BlackCaps)

இந்திய கிரிக்கெட் அணி. (BlackCaps)

#ICC #WorldCup2019: #IndianCricketTeam Announced | இந்திய அணி தேர்வு செய்வதற்காக மும்பையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தேர்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. #TeamIndia

  • News18
  • Last Updated :
    2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ம் தேதி கடைசி நாளாகும். இந்த தொடருக்கான நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் அறிவிக்கப்பட்டன.

    இந்திய அணி தேர்வு செய்வதற்காக மும்பையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தேர்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில், விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.



    உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி:

    விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக்.

    மற்றொரு தமிழக வீரர் அஷ்வின் மற்றும் ஃபார்மில் இல்லாத முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. அதேபோல், இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-க்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.



    உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

    ஒற்றை இலக்க ரன்களில் சுருண்ட வீரர்கள்! டெல்லி அணியிடம் தோற்ற ஹைதராபாத்




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Murugesan L
    First published:

    Tags: BCCI, Captain Virat Kohli, Indian cricket team, MS Dhoni, World cup cricket 2019

    அடுத்த செய்தி