உறுதியுடன் களமிறங்கும் இந்தியா... நெருக்கடியில் இங்கிலாந்து...! விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத இன்றைய போட்டி

இந்நிலையில், வாழ்வா? சாவா? என்ற நிலையில் பலம் வாய்ந்த இந்தியாவை இங்கிலாந்து அணி எதிர்கொள்கிறது.

Web Desk | news18
Updated: June 30, 2019, 7:12 AM IST
உறுதியுடன் களமிறங்கும் இந்தியா... நெருக்கடியில் இங்கிலாந்து...! விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத இன்றைய போட்டி
ICC World Cup 2019
Web Desk | news18
Updated: June 30, 2019, 7:12 AM IST
உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன், 38-வது லீக் ஆட்டம் பமிங்ஹாமில் (Birmingham) உள்ள எட்ஸ்பேஸ்டன் (Edgbaston) மைதானத்தில் இன்று பிற்பகல 3 மணிக்கு தொடங்குகிறது. இதில், முன்னாள் சாம்பியனான இந்தியா - இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை, இதுவரை ஆடிய 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றிபெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அரையிறுதியை உறுதி செய்ய வேண்டும் என்றால் இங்கிலாந்து எதிரான நாளை போட்டியில் வெற்றிபெற்றால் போதும்.




Loading...



இந்தியாவில், ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளனர். நடுவரிசையில் தோனி, ஹர்திக் பாண்டியாவும் நம்பிக்கை அளிக்கின்றனர்.

பந்துவீச்சில் பும்ரா, முகமது ஷமி, சஹால், குல்தீப் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகின்றனர்.

பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் இந்தியா, தோல்வியே சந்திக்காமல் வெற்றிநடை போட்டு வருகிறது. இதுவே வலுவான அணி என்பதை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

இங்கிலாந்து அணி


அதேவேளையில், இங்கிலாந்து, 7 போட்டிகளில் 4 வெற்றியுடன் பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது. எனவே, அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில், வாழ்வா? சாவா? என்ற நிலையில் பலம் வாய்ந்த இந்தியாவை எதிர்கொள்கிறது.

அந்த அணியில், ஜோ ரூட், பேயர்ஸ்டோவ், இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் பக்கபலமாக விளங்குகின்றனர்.

பந்துவீச்சில், ஆர்ச்சர், மார்க்-வுட், மொயீன் அலி நம்பிக்கை அளிக்கின்றனர்.

சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் அடுத்தடுத்த வெற்றியால் உற்சாகத்தில் இருந்த இங்கிலாந்து, தனது கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. இதனால், கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது...

இதை சாதகமாக்கி, இந்தியா இன்றைய போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தள்ளது. இருப்பினும், வெற்றிக்காக இங்கிலாந்து கடுமையாக போராடும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





First published: June 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...