Home /News /sports /

ICC World Cup 2019 | உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சியாட்டம்: இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

ICC World Cup 2019 | உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சியாட்டம்: இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சியாட்டம் மழையால் கைவிடப்பட்டதால் ஏமாற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சியாட்டம் மழையால் கைவிடப்பட்டதால் ஏமாற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சியாட்டம் மழையால் கைவிடப்பட்டதால் ஏமாற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சியாட்டத்தில் இந்திய அணி, வங்கதேச அணியுடன் இன்று மோதவுள்ளது.

இங்கிலாந்தில் வருகின்ற 30-ம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்குகிறது. இதில், பங்கேற்கும் 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை, நியூசிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சியாட்டத்தில் படுதோல்வியை சந்தித்தது.

உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்தியா கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னணி பேட்ஸ் மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால், 179 ரன்களுக்குள் சுருண்டு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இப்போட்டியில், ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜாவை தவிர எஞ்சிய வீரர்கள் சோபிக்கவில்லை.

இந்நிலையில் 2-வது பயிற்சியாட்டத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதுகிறது. இப்போட்டி, கார்டிஃப் மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. மோர்தசா தலைமையிலான வங்கதேச அணி, இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பே, உலகக் கோப்பையில் பங்கேற்கும் எண்ணத்தில் வரவில்லை என்றும், கோப்பைக்கான கனவில் வந்துள்ளதாக கூறியது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சியாட்டம் மழையால் கைவிடப்பட்டதால் ஏமாற்றம் கண்டது. மேலும் பிரதான சுற்றுக்குள் நம்பிக்கையுடன் களமிறங்குவதற்கு, இந்தியா வங்கதேசத்துக்கு இன்றைய போட்டி முக்கியமானது என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see... உலகக்கோப்பை தொடருக்காக இங்கிலாந்து புறப்பட்டு சென்ற கோலி தலைமையிலான இந்திய அணி

Also see... 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: ICC Cricket World Cup 2019, World cup cricket 2019

அடுத்த செய்தி