நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோனியை 5-வதாக இறக்கியிருக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து லார்டஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது இங்கிலாந்து.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்களை எடுத்தது. 242 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற போது 1 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 15 ரன்களை எடுத்தது. 16 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணியால் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதையடுத்து அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றது.
இந்நிலையில் பவுண்டரி முறையில் இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றது குறித்த கேள்விக்கு சச்சின் டெண்டுல்கர், ‘ இப்படி ஒர் சூழ்நிலையில் பவுண்டரி முறையை வைத்து யார் வென்றது என்பதை தீர்மானித்ததற்கு பதிலாக இன்னொரு சூப்பர் ஓவர் இருந்திருக்க வேண்டும். இது உலகக்கோப்பைக்கு மட்டுமல்ல. அனைத்து விளையாட்டுகளும் முக்கியமானது. கால்பந்தாட்டத்தில் இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் நேரம் நீட்டிக்கப்படும்’ என்று பதிலளித்துள்ளார்.
மேலும் தோனியை 5-வதாக இறக்கியிருக்க வேண்டும். இந்திய அணி இப்படி ஒரு நிலையில் இருக்கும் போது தோனியின் ஆட்டம் மிகவும் முக்கியமனாது. அவருக்கான நேரத்தை கொடுத்திருக்க வேண்டும். தோனியை 5-வதாகவும் அதை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா மட்டும் தினேஷ் கார்த்திக்கை இறக்கியிருக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்
Also watch
Published by:Prabhu Venkat
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.