Home /News /sports /

இந்தியா - பாக். கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடக்கும்: ஐசிசி சூசகம்!

இந்தியா - பாக். கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடக்கும்: ஐசிசி சூசகம்!

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள். (Getty Images)

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள். (Getty Images)

#BCCI raises concerns over Indo-Pak match | இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐசிசி சூசகமாக தெரிவித்துள்ளது. #INDvPAK #WorldCup2019

  • News18
  • Last Updated :
    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என ஐசிசி உறுதியளித்துள்ளது.

    புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி (பிப்.14) தீவிரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் ராணுவத்தினர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

    இதனை அடுத்து, நேற்று காலை (பிப்.27) பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு போர் விமானங்கள் இந்திய வான் எல்லைக்கு நுழைந்து தாக்குதல் நடத்த முயறித்தன.

    உடனே இந்திய ராணுவத்தால் அவை விரட்டி அடிக்கப்பட்டன. அத்துடன், பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

    இந்தியா - பாகிஸ்தான் எல்லை. (கோப்புப் படம்)


    இந்த நிகழ்வின்போது இந்திய விமானி அபிநந்தன் திரும்பவில்லை. பின்னர், பாகிஸ்தான் ராணுவத்திடம் அவர் இருப்பதாக தகவல் தெரிய வந்தது.

    இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் இருக்கும் நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என முன்னாள் வீரர்களான சவுரவ் கங்குலி, ஹர்பஜன் சிங் ஆகியோர் கூறினர்.

    ஆனால், சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    ICC, PCB, BCCI
    இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது ரசிகர்கள். (Image: AP)


    இந்நிலையில், ஐசிசியின் தலைமை நிர்வாகிகள் குழு கூட்டம் நேற்று (பிப்.27) துபாயில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பல்வேறு பாதுகாப்பு காரணங்கள் முன்வைக்கப்பட்டன.

    அதில், இந்திய கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டும் என ஐசிசி உறுதியளித்தது.

    ICC, ஐசிசி அலுவலகம்
    ஐசிசி அலுவலகம். (ICC)


    இதனால், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐசிசி சூசகமாக தெரிவித்துள்ளது.

    VIDEO: தோனியைப் பார்த்து வாயைப் பிளந்த ஆஸி. பவுலர்!

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: India vs Pakistan, World cup cricket 2019

    அடுத்த செய்தி