• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

இந்திய மகளிர்  கிரிகெட் அணியினர்

இந்திய மகளிர் கிரிகெட் அணியினர்

பலவீனமான அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மகளிர் 20 ஓவர் உலகப் கோப்பை போட்டியில் இன்று இந்தியா-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி இந்தப்போட்டியில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் 20 ஓவர் மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொண்டது. அதில் நியூசிலாந்தை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இந்திய மகளிர் அணியினர்


2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இந்நிலையில், இன்று நடைபெறும் 3-வது போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொள்கிறது. பலவீனமான அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்துடன் உள்ளது.  இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see... ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: