ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மகளிர் உலகக்கோப்பை 2022: மே.இ.தீவுகள் அணிக்கு த்ரில் வெற்றி- புள்ளிகள் நிலவரம்

மகளிர் உலகக்கோப்பை 2022: மே.இ.தீவுகள் அணிக்கு த்ரில் வெற்றி- புள்ளிகள் நிலவரம்

மகளிர் உலகக்கோப்பை 2022- வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

மகளிர் உலகக்கோப்பை 2022- வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மகளிர் உலகக்கோப்பை 2022: மே.இ.தீவுகள் அணிக்கு த்ரில் வெற்றி

நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை ஐசிசி தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மவுண்ட் மாங்குனியில் இன்று நடைபெற்ற  17-ஆவது லீக் போட்டியில் வங்காளதேச அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷெமைன் கேம்பல் 53 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

வங்காளதேச அணி தரப்பில் சல்மா காதுன், நஹிதா அக்டர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இதை தொடர்ந்து 141 ரன்கள் இலக்குடன் வங்காளதேச அணி விளையாட தொடங்கியது.

தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷமீமா சுல்தானா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா 25 ரன்களில் வெளியேறினார். மற்ற வீராங்கனைகள் யாரும் சோபிக்காத நிலையில் அந்த அணி 49.3 ஓவர்களில் 136 ரன்கள் மட்டுமே அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை  வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 8 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் 9 விக்கெட்டுகள் விழுந்தன. நகிதா அக்தர், பரிஹா திரிஸ்னா ஆகியோர் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் டெய்லர் கடைசி ஓவரி வீசினார்.

முதல் பந்தில்  நஹீதா அக்தர் 2 ரன்களை எடுத்தார். 2வது பந்தில் 1 ரன் எடுத்தார், ஆக 4 பந்துகளில் 5 ரன்கள் தேவை அப்போது திரிஸ்னா பந்தை வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார். 133 லிருந்து 136 ஆல் அவுட் ஆனது, அந்த சிங்கிளை நஹீதா அக்தர் எடுக்காமல் இருந்திருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது ஏனெனில் அவர்தான் செட்டில்டு பேட்டர். நஹீதா அக்தர்தான் 25 நாட் அவுட் என்று இருந்தார்.

மே.இ.தீவுகள் தரப்பில் ஹெய்லி மேத்யூஸ் 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்த ஆஃபி பிளெச்சர் மற்றும் டெய்லர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகியாக ஹெய்லி மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டார்.

புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி அதே 8 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் இருக்க, இந்திய மகளிர் அணி 4 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து 4 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் மகளிர் அணி எந்தப் புள்ளிகளையும் பெறாமல் கடைசி இடத்தில் உளளது.

First published:

Tags: ICC world cup